For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” – லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள்.

இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆய்வு:

20 ஆண்டுகளாக ஆய்வு:

அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம்.

அரை லிட்டரில் ஆபத்து:

அரை லிட்டரில் ஆபத்து:

இதில் தினமும் இரண்டு கிளாஸ்க்கும் அதிகமாக அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு விரைவிலேயே உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

விரைவில் உயிரிழப்பு:

விரைவில் உயிரிழப்பு:

குறைவாக பால் குடிப்போரை விட அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிரிழப்பதையும் எங்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளோம்.

சர்க்கரைத் தன்மையால் வினை:

சர்க்கரைத் தன்மையால் வினை:

பாலில் கலந்திருக்கும் "லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்" என்ற பொருட்களின் சர்க்கரை தன்மை காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Drinking more than two glasses of milk a day may not protect bones against breaking - and may even lead to higher rates of death, say researchers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X