ஆஸ்திரேலியாவில் தாயின் மரணத்தை மறைத்த மகள் கைது
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் தாயின் மரணத்தை மறைத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து ஆடம்பரமாக செலவு செய்த மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
மெலீசா பீகாக் என்ற 48 வயதான பெண்ணின் தயாருக்கு 83 வயதாகிறது. இவர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
ஆனால் அவரது மரணத்தை மறைத்து விட்ட மெலீசா, தயாரின் வங்கிக் கணக்கில் இருந்த பல லட்சம் ரூபாயை எடுத்து ஆடம்பரமாக செலவழித்துள்ளார்.
சடலத்தை அறைக்குள் வைத்து பூட்டியிருந்த மெலீசா நறுமண தைலங்களை தெளித்து துர்நாற்றத்தை மறைத்துள்ளார்.
சிட்னி போலீசுக்கு இந்த தகவல் தெரியவரவே சடலத்தைக் கைப் பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது ஜூலை 28ம் தேதி அந்த மூதாட்டி மரணமடைந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மகளை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications