Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்து போன அப்பா அனுப்பும் பிறந்த நாள் வாழ்த்து.. நான்கு வருடமாக நடக்கும் அதிசய சம்பவம்!

தன் மகளின் பிறந்த நாளுக்கு இறந்த போன அவரின் தந்தை நான்கு வருடமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இறந்து போன அப்பா அனுப்பும் பிறந்த நாள் வாழ்த்து.. நான்கு வருடமாக நடக்கும் அதிசய சம்பவம்!- வீடியோ

    வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வருகிறார் பெய்லி செல்லர்ஸ். இவரது தந்தை மைக்கேல் செல்லர்ஸ் கடந்த நான்கு வருடமாக பெய்லிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி வருகிறார்.

    ஆனால் மைக்கேல் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே மரணம் அடைந்துவிட்டார். மேலும் பெய்லிக்கு சரியாக பிறந்த வாழ்த்து செய்தியோடு ஒவ்வொரு வருடமும் பூங்கொத்தும் வந்து இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது 21வது பிறந்த நாள் கொண்டாடிய அந்த பெண்ணுக்கு அதேபோல் வாழ்த்து செய்து வந்து இருக்கிறது. தற்போது வந்த அந்த வாழ்த்து செய்திதான் இறந்த அப்பாவின் கடைசி பிறந்த வாழ்த்து செய்தி என்று அந்த பூங்கொத்தில் எழுதி இருக்கிறது.

    கேன்சர் காரணமாக மரணம்

    கேன்சர் காரணமாக மரணம்

    அமெரிக்காவின் வாஷிங்டனில் வசித்து வந்தார் மைக்கேல் செல்லர்ஸ். 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள் திடீர் என்று அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆறு மாதத்திற்குள் எப்படியும் மரணம் அடைந்துவிடுவார் என்று அவருக்கு நாள் குறிக்கப்பட்டது. அதையடுத்து அடுத்த ஆறு மாதத்தை அவர் மிகவும் சோகமயமாக கழித்து இருக்கிறார். இந்த நிலையில் அதே வருடம் ஆகஸ்ட் மாதம் மரணம் அடைந்துள்ளார்.

    முதல் பிறந்த நாள் வாழ்த்து

    முதல் பிறந்த நாள் வாழ்த்து

    இந்த நிலையில் அவர் இறந்து சரியாக மூன்ற மாதம் கழித்து நவம்பரில் அவரின் கடைசி மகள் பெய்லி செல்லர்ஸுக்கு பிறந்த நாள் வந்து இருக்கிறது. சரியாக இரவு 12 மணிக்கு அவரது வீட்டு வாசல் கதவு தட்டப்பட்டுள்ளது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு ஒரு பூங்கொத்து மட்டும் இருந்துள்ளது. அதில் ''நான்தான் 'மைக்கேல், உன் அப்பா. உனக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று எழுதப்பட்டு இருக்கிறது. இதை பார்த்ததும் அந்த பெண் அந்த இடத்திலேயே அழுது இருக்கிறார்.

    அப்பாவின் கடிதம்

    அப்பாவின் கடிதம்

    மேலும் அந்த பூங்கொத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் ''உன்னுடைய 21 வயது பிறந்த நாள் வரை நீ இப்படியான கடிதங்களை பெறுவாய். பிறந்த நாளுக்கு மட்டுமில்லை உன் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான பல நாட்களுக்கும் உனக்கு இப்படி பூங்கொத்து கிடைக்கும். 21 வயதுக்கு பின் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்'' என்று உருக்கமாக எழுதி இருக்கிறார். அதே போல் அடுத்தடுத்த பிறந்த நாளுக்கு சரியாக அந்த பெண்ணுக்கு கடிதம் வந்துள்ளது. இதற்கான அனைத்து திட்டங்களையும் அந்த தந்தை மரணம் அடைவதற்கு முன்பே செய்துள்ளார்.

    கடைசி வாழ்த்து

    இந்த நிலையில் அந்த பெண் தன்னுடைய 21 வது பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு முன் கொண்டாடினார். அப்போது அதேபோல் அப்பாவிடம் இருந்து பூங்கொத்து வந்துள்ளது. அதில் ''இதுதான் நான் உனக்கு சொல்லும் கடைசி வாழ்த்து. இனி நீ என்னை நினைத்து அழவே கூடாது. உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உனக்கு தேவைப்படும் சமயங்களில் உனக்கு அருகில் நான் இருப்பேன். நான் இருக்கும் இடம் நன்றாக இருக்கிறது. விரைவில் சந்திக்கலாம்'' என்று எழுதியுள்ளார். தற்போது அதை அந்த பெண் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+