அடி ஆத்தி.. ஒத்த வாழைப்பழம் ரூ. 85 லட்சமா.. நாமலாம் வெங்காயத்துக்கு கோயில் கட்டியே கும்பிடலாம்!
மியாமி: மியாமியில் ஒரே ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் ரூ. 85 லட்சத்திற்கு ஏலம் போன சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் மியாமி நகரில் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் இத்தாலியக் கலைஞரான மௌரிஷியோ என்பவர் வித்தியாசமாக வாழைப்பழம் ஒன்றை காட்சிக்கு வைத்திருந்தார். காமெடியன் எனப் பெயரிட்டு அந்த வாழைப்பழத்தை அவர் கண்காட்சியில் சுவற்றில் டேப் வைத்து ஒட்ட வைத்தார்.
என்ன ஆச்சர்யம். அந்த வாழைப்பழத்தையும் ஒருவர் இந்திய மதிப்பில் ரூ. 85 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்தத் தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கலைஞர் மௌரிஷியோ
வித்தியாசமான கலை வேலைப்பாடுகள் செய்வதில் வல்லவர் மௌரிஷியோ. ஏற்கனவே அவர் செய்த தங்க டாய்லெட் இணையத்தில் டிரெண்டிங்கானது. அப்போதே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

வாழைப்பழம் விற்பனை
அந்த தைரியத்தில் தான் வாழைப்பழத்தை அவர் கண்காட்சியில் இடம் பெறச் செய்தார். அந்த வாழைப்பழம் அவர் கஷ்டப்பட்டு செய்ததில்லை. கடையில் வாங்கிய ஒன்று தான். விளையாட்டுக்காக அதனை அவர் கண்காட்சியில் இடம் பெறச் செய்தாரா எனத் தெரியவில்லை.

அதிக விலை
ஆனால் அந்த வாழைப்பழத்தைப் பார்த்து, ‘ஆஹா ஓஹோ' எனப் பாராட்டி தள்ளி விட்டனர் கண்காட்சிக்கு வந்தவர்கள். அதனால் தான் அவ்வளவு அதிகமான தொகை கொடுத்து அதனை ஒருவர் வாங்கி இருக்கிறார் என்கிறார்கள். வாழைப்பழத்தை வாங்கிய நபர் பற்றிய விபரங்கள் சரிவரத் தெரியவில்லை.

அதிர்ச்சி
ஆனால் தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அந்த வாழைப்பழத்தை டேவிட் என்ற கலைஞர், திடீரென எடுத்து சாப்பிட்டு விட்டார். இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக போலீஸ் தன்னைக் கைது செய்தாலும், மன்னிப்பு கேட்கப் போவதில்லை என டேவிட் கூறியிருக்கிறார்.

ஏலம்
இந்த வாழைப்பழ சம்பவத்தை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். உண்மையில் அந்த வாழைப்பழத்தின் பெயர் இல்லை, அதை வாங்கியவர் தான் காமெடியன் என அவர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கூடவே, தங்கள் கைக்கு கிடைத்த சில உணவுப் பொருட்களையும் சுவற்றில் ஒட்டி ஏலம் என கலாய்த்து வருகின்றனர்.

வெங்காயம் ஏலம்
இந்தியாவில் இப்போது வெங்காயம் தான் பிரபலம் என்பதால், இந்திய நெட்டிசன்கள் வெங்காயத்தை சுவற்றில் டேப் கொண்டு ஒட்டி, அதனை ஏலத்தில் விடப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications