ஈரானை சூறையாடிய போர் விமானங்கள்.. இஸ்ரேல் ஆபரேஷனுக்கு என்ன பெயர் தெரியுமா? இதுதான் அர்த்தம்
டெல்அவிவ்: நேற்றைய தினம் ஈரானுக்குள் நுழைந்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஏவுகணைகளை குண்டுகளாக வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் 4 வீரர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர் ‛Days of Repentance’. இந்நிலையில் தான் அந்த பெயரின் பின்னணி மற்றும் இஸ்ரேல் ஏன் அந்த பெயரை தேர்வு செய்தது என்பது பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் மற்றும் லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லாக்கள் மீதான பதிலடி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் நேற்று இஸ்ரேல், ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்து போர் விமானங்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

கடந்த 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் நேற்றைய தினம் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் 5வது ஜெனரேஷன் எப்-35 அதிர் பைட்டர் ஜெட்கள், எப் 15I ரா'ம் கிரவுண்ட் அட்டாக் ஜெட்கள், எப் -16I சுபா ரே் டிபென்ஸ் ஜெட்ஸ் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தின. இந்த போர் விமானங்கள் மூலம் ராம்பேஜ் லாங்க் ரேஞ்ச், சூப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் ‛ராக்ஸ்’ நெக்ஸ்ட் ஜெனரேஷன் உள்ளிட்ட ஏவுகணைகள் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 4 ஈரான் வீரர்கள் பலியாகி உள்ளன.
ஈரான் மீதான இந்த தாக்குதலில் இஸ்ரேல் போர் விமானங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அனைத்து விமானங்களும், அதனை இயக்கிய விமானிகளும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பி உள்ளனர். ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வைத்த பெயர் என்னவென்றால் ‛Operation Days of Repentance’.. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ‛மனம் திரும்புதலின் நாட்கள்’ என்று கூறலாம்.
அதாவது யூதர்களின் புனித நாளாக யோம் கிப்பூர் (Yom Kippur) உள்ளது. இது யூதர்களின் தவக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இந்த யோம் கிப்பூர் என்பது பின்பற்றப்பட்டு வருகிறது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் யூதர்கள் தங்களின் புத்தாண்டை ரோஷ் ஹஷனா (Rosh Hashanah) என அழைக்கிறார்கள். இந்த புத்தாண்டு தினத்தில் இருந்து 10 நாட்கள் கழித்து யோம் கிப்பூர் வரும். இந்த 10 நாட்கள் யூதர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும்.
இந்த 10 நாட்களும் யூதர்கள் தாங்கள் செய்த தவறுக்கு கடவுளிடம் மன்னிப்பு கோரி மனம் திரும்பும் நாட்களாக அணுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மாலையில் சூரியன் மறைந்த பிறகு ரோஷ் ஹஷனா வந்து அக்டோபர் 4ம் தேதி சூரியன் உதிக்கும் வரை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 11ம் தேதி முதல் அக்டோபர் 12ம் தேதி வரை யோக் கிப்பூர் தினம் வந்தது. யூதர்களின் வாழ்க்கையில் முக்கிய நாளான இந்த 10 நாட்களை குறிப்பிடும் வகையில் தான் ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் ‛Days of Repentance’என ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம்தேதி யூதர்களின் புனித நாட்களை அனுசரித்தபோது தான் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலால் தான் இஸ்ரேல் ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போரை தொடர்ந்தது. இந்த போர் லெ பனானின் ஹிஸ்புல்லாக்கள் உடனான மோதலாக மாறி ஈரானுடன் சண்டையாக வெடித்துள்ளது. இதனை நினைவுக்கூறும் வகையிலும் ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் ‛Days of Repentance’ எனும் இந்த பெயரை வைத்துள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications