பிணைய கைதிகளை விடுவிக்க 5 நாள் போர் நிறுத்தம்? இஸ்ரேல் ஹமாஸ் போரில் பரபரப்பு! ஆனா கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே யுத்தம் தொடரும் நிலையில், இதில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகப் பரபர தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 40 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது முதலில் ஹமாஸ் திடீரென மோசமான தாக்குதலை நடத்திய நிலையில், அதன் பிறகு இஸ்ரேல் அதற்குப் பதிலடி தர ஆரம்பித்தது.

 Deal not finalized with Hamas To Free Hostages For Halt In Gaza Strikes

முதலில் காசா பகுதிகளில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய நிலையில், தொடர்ந்து படையெடுப்பையும் ஆரம்பித்து உள்ளது. காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

போர் நிறுத்தம்: இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஹமாஸ் இடையே ஐந்து நாள் போர் நிறுத்தம் தொடர்பாக உடன்பாடு ஏற்பட உள்ளதாகவும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்குப் பதிலாக சுமார் 50 பிணையக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இருதரப்பிற்கும் இடையேயான பேச்சுவார்த்தையை கத்தார் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே 5 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக சுமார் 50 பிணையக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது. அவர்கள் ஒரே நேரத்தில் விடுவிக்கப்படுவார்கள் அல்லது ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு சில வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டது.

பேச்சுவார்த்தை: கடந்த அக். மாதம் இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேல் நாட்டினர் கொல்லப்பட்ட நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 240 பேரை ஹமாஸ் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதி மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தச் சூழலில் தான் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இது சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. இந்த குறித்த கேள்விக்குப் பதிலளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இப்போது வரை எந்தவொரு ஒப்பந்தமும் இறுதியாகவில்லை.

பிணையக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஹமாஸிடம் இருந்து அவர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்றார்.

வெள்ளை மாளிகை: அதேபோல அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் இதுவரை எந்தவொரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்று இந்த செய்தியை மறுத்துள்ளது. இன்னும் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று கூறிய வெள்ளை மாளிகை, இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தீவிரமாக முயன்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

பிணையக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் இரண்டு நிபந்தனைகளை முக்கியமாக முன்வைக்கிறது. ஒன்று காசா மீது இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்தை இஸ்ரேல் வலியுறுத்துகிறது. மறுபுறம் இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் ஆகியவை தான் இரு முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

இரண்டு பக்கமும் அழுத்தம்: இஸ்ரேலைப் பொறுத்தவரை அதன் இரண்டு பக்கங்களில் இருந்தும் இப்போது அழுத்தத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. முதலில் ஹமாஸிடம் இருக்கும் பிணையக் கைதிகளை விடுவிக்கத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அடுத்து காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தொடர்பாகச் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்த போர் ஆரம்பித்தது முதல் 11,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் குறித்த சர்வதேச நாடுகளின் அழுத்தமும் அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+