எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு....சிறை உடைத்து தப்பிய வழக்கில் அதிரடி தீர்ப்பு
கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, சிறையை உடைத்து தப்பிய வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோர்சி மீண்டும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வந்தன. போராட்டக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த நிலையில், நிலைமையை 48 மணி நேரத்திற்குள் சமாளிக்க வேண்டும் என அரசுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், ராணுவம் விதித்த கெடு முடிந்ததையடுத்து பீரங்கி உள்ளிட்ட ராணுவ வாகனங்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டன. இதைத் தொடர்ந்து மோர்சி தலைமையிலான அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் சிறையில் கொல்லப்பட்ட வழக்கில் மோர்சிக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களிலேயே அவர் சிறையை உடைத்து தப்பி விட்டார்.
சிறை உடைத்து தப்பிய இந்த வழக்கில் தான் தற்போது கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications