உச்ச கட்டத்தில் போர்.. தீவிரம் காட்டும் இஸ்ரேல்! பாலஸ்தீன பலி எண்ணிக்கை 40,000ஐ கடந்தது
காசா: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசாவில் போரால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,000ஐ கடந்திருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,435ஆக இருக்கிறது. இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 93,534 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 25 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இப்படியாக நிலைமை மோசமடைந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க தொடங்கின. எனவே, அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இவை அனைத்தும் இஸ்ரேல் ஆதரவு நாடுகள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பணய கைதிகளை விடுவித்தல், தாக்குதலை கைவிடுதல் என இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் ஏற்க முன்வந்தது. இப்படி இருக்கும்போதுதான் போரை தீவிரப்படுத்துவதை போன்ற சம்பவம் ஒன்று நடந்தது.

அதாவது ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு பதிலடி கொடுப்போம் எனவும் ஹமாஸ் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாது ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஈரான் உள்ளிட்ட நாடுகள், இனி வரும் நாட்களில் போரில் நேரடியாக பங்கேற்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால், அது மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கமா அமைந்துவிடும். ஈரான் ஆதரவு நாடுகள் ஒருபுறமும், இஸ்ரேல் ஆதரவு நாடுகள் ஒருபுறமும் என போர் விரிவடையும். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வேகமாக பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. அல்லது, பொருளாதார வளர்ச்சியை சீரான அளவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு திணறி வருகின்றன.
இப்படி இருக்கையில் இந்த நாடுகள் போரில் பங்கேற்பதை தவிர்க்கும் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். எப்படி இருப்பினும் போர் அப்பாவி மக்களை எப்போதும் பலியாக்குகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications