காஸாவில் இஸ்ரேல் உச்சகட்ட வெறியாட்டம்.. ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் உச்சகட்ட வெறியாட்டம் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் வான் மற்றும் தரை வழித்தாக்குதலை நடத்தி வருகிறது. சனிக்கிழமை இரவு முதல் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தரைவழி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

உச்சகட்ட வெறியாட்டம்
இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

உறுதி செய்த அதிபர்
குறிப்பாக ஒரே பகுதியை சேர்ந்த 60 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸ் கூறுகையில், காஸாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷெஜய்யாவில் பெருமளவிலான உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நீடிக்கும்- இஸ்ரேல்
ஆனால் காஸா மீதான தங்களது தாக்குதல் மேலும் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிணைக் கைதியாக இஸ்ரேல் வீரர்?
இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தாங்கள் உயிருடன் பிடித்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தினர் அறிவித்தனர்.

உறுதிப்படுத்தாத இஸ்ரேல்
இந்த அறிவிப்பை வாழ்த்தும் விதமாக காஸா முழுவதும் துப்பாக்கி முழக்கம் எழுப்பப்பட்டது. ஆனால் தங்களது வீரர் ஒருவர் பிடிபட்டதை இஸ்ரேல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications