டைட்டானிக் நீர்மூழ்கி கப்பல்! நினைக்கிற மாதிரி இல்லை.. வேற விதமா வாய்ப்பு? ட்விஸ்ட் வைத்த எக்ஸ்பர்ட்
வாஷிங்டன்: டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் அவசர காலத்தில் 96 மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளதால் கடலில் தொடர்பை இழந்த அந்த கப்பலை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால் உச்ச கட்ட டென்ஷனுடன் தேடும் பணி நடக்கும் நிலையில், கடலுக்குள் நிலவும் ஆக்சிஜன் தேவை குறித்து நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் கப்பலை அறிந்திடாத நபர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். தனது முதல் பயணத்திலேயே விபத்தில் சிக்கி உலகையே அதிரவைத்தது டைட்டானிக் கப்பல். நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விபத்து நடந்தாலும் இந்த கப்பல் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அகலவில்லை. கடந்த 1997- ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் உலகம் முழுக்க பெரும் வசூலை வாரி குவித்தது.
மக்கள் மத்தியில் டைட்டானிக் கப்பல் மீதான பேரார்வத்தை வெளிக்காட்டும் விதமாக இருந்தது. அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம். விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் சேதங்கள் கனடா நாட்டின் நியூபவுண்ட்லாந்து தீவில் இருந்து சுமார் 595 கி.மீ. தொலைவில், 13 ஆயிரம் அடி ஆழத்தில் அட்லாண்டிக் படுகையில் கிடக்கின்றன.
இந்த நிலையில், டைட்டானிக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்களை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அழைத்துச் சென்று வருகிறது. வாஷிங்டனை சேர்ந்த 'ஓசன்கேட் எக்ஸ்படீசன்ஸ்' என்ற நிறுவனம் 22 அடி நீளம் கொண்ட சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ளது. 5 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் உள்ள சிறிய அந்த கப்பல் டைட்டானியம் மற்றும் கார்பன் இழைகளால் ஆனது.

5 கோடீஸ்வரர்களுடன் சென்ற அந்த அந்த நீர்மூழ்கிக் கப்பல் சில நாட்களுக்கு முன்பு, கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே அத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தேடும் பணிகள் தான் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. அந்த கப்பலில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருக்கும் நிலையில், அதைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலை இப்போது அமெரிக்கக் கடலோர காவல்படை, கனடா நாட்டின் ராணுவ விமானங்கள், பிரான்ஸ் நாட்டின் கப்பல்கள், கேமரா பொருத்தப்பட்ட நவீன ரோபோக்கள் ஆகியவை மாயமான டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. சில மணி நேரமே அந்த நீர்மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்பு இருப்பதால் முழு வீச்சில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உற்றுப்பார்க்க வைத்து இருக்கிறது இந்த டைட்டானிக் நீர் மூழ்கி கப்பல்.
இதனிடையே, டைட்டானிக் நீர் மூழ்கி கப்பலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாக சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நியூஃபவுண்ட்லாந்தில் உள்ள மெமோரியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஹைபர்பேரிக் மருத்துவ நிபுணரான டாக்டர் கென் லெடெஸ், பிபிசி நிறுவனத்திடம் இது தொடர்பாக கூறியதாவது:-
"எந்த அளவுக்கு அங்கு குளிர் நிலவுகிறது என்பதையும் ஆக்சிஜனை பாதுகாப்பதில் எந்த அளவுக்கு திறனுடன் அவர்கள் செயல்பட்டார்கள் என்பதை சார்ந்து உள்ளது. நடுங்க வைக்கும் குளிர் என்றால் அதிக ஆக்சிஜன் தேவை இருக்கும். எனினும், அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அனைவரும் ஒன்று கூடி இருந்தால் வெப்பத்தை பராமரிக்க உதவும்.
ஆக்சிஜன் தீர்ந்து போவது என்பது படிப்படியான நடைமுறையாக இருக்கும். ஒரு விளக்கை அணைப்பது போன்றது இல்லை இது. மலையில் ஏறுவது மாதிரியான நடைமுறை. அதாவது வெப்ப நிலை குளிர்ச்சி அடைந்தால் மெடோபோலிசம் குறையும். எனவே இது நாம் எவ்வளவு வேகமாக மலையில் ஏறுகிறோம் என்பதை சார்ந்ததாக இருக்கும். எனினும் சூழல்கள் நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலர் மற்றொருவரை விட நீண்ட காலம் தாக்கு பிடிக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications