டிரம்பிற்கு மரண அடி தந்த சீனா! கொஞ்ச நேரத்தில் அமெரிக்க பொருளாதாரமே ஆடி போய் இருக்கும்! இது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனா மீது அமெரிக்கா 145% வரியை விதித்துள்ளது அனைவருக்கும் தெரியும். இது அமெரிக்கா சீனா நாடுகளைப் பாதிப்பது மட்டுமின்றி, சர்வதேச வணிகத்தையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவுக்குச் சீனா எதிர்பார்க்காத இடத்தில் அடி கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்பது யாருக்குமே தெரியாது. காலையில் ஒன்று மதியம் ஒன்று என மாற்றி மாற்றி பேசுபவர் டிரம்ப். இவர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். அதாவது உலக நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து அதிக வரி வசூலிப்பதாகச் சொல்லி, அந்த நாடுகள் மீது வரியை அறிவித்தார்.

Did China Influence US Treasuries Yield Swings

டிரம்ப் வரி

இருப்பினும், ஒரே வாரத்தில் அவர் பேக் அடித்தார். உலக நாடுகள் மீதான வரியை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதேநேரம் சீனா மீதான வரிகளை மட்டும் 145%ஆக உயர்த்துவதாகவும் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் திடீரென ரெசிப்ரோகல் வரியை நிறுத்தி வைக்க முக்கிய காரணமாக அமெரிக்க பாண்ட் சந்தையில் ஏற்பட்ட மாற்றம் தான்.

அதாவது அமெரிக்க அரசின் டிரஷரி பாண்டுகள் வரலாறு காணாத அளவுக்குத் திடீரென விற்கப்பட்டது. பாண்டுகள் அதிகம் விற்கப்பட்டதால் அதன் மதிப்பு சரிந்தது, இதனால் தர வேண்டிய வட்டி வேகமாக உயர்ந்தது. அதாவது பாண்டு சந்தையில் அமெரிக்க டிரஷரி பத்திரங்கள் அதிகம் விற்கப்பட்டதால் அமெரிக்கா கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சீனா கொடுத்த அடி

இதற்கிடையே இதன் பின்னணியில் சீனா இருக்கலாம் என பலரும் கூறுகிறார்கள். 30 ஆண்டு டிரஷரி பாண்டுகள் தான் அதிகம் விற்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு ஒரே நேரத்தில் அமெரிக்க பாண்டுகள் இந்தளவுக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. 30 ஆண்டு டிரஷரி பாண்டுகள் கணிசமான அளவுக்குச் சீனா வசமே இருக்கும் சூழலில், இதற்குப் பின்னணியில் சீனா இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இப்போது ஜப்பானுக்குப் பிறகு, அமெரிக்கக் கடன் பத்திரங்களை அதிகம் வைத்திருக்கும் 2வது நாடாகச் சீனா இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் இல்லை

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்கள் மீது அதீத வரி விதித்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க சீனா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா மீதான அழுத்தத்தை அதிகரிக்கவே சீனா இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் என்று எஸ்எம்பிசி நிக்கோ செக்யூரிட்டீஸின் அட்டாரு ஒகுமுரா கூறினார். இருப்பினும், அமெரிக்கக் கடன் பத்திரச் சந்தையில் ஏற்பட்ட இந்த விற்பனைக்குச் சீனா தான் காரணம் என்பதை நிரூபிக்க ஆதாரம் எதுவும் தெளிவாக இல்லை.

அமெரிக்கா சீனா

டிரஷரி பாண்டுகளை சீனா மேலும் தொடர்ந்து விற்றால் அது அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான அழுத்தத்தையே ஏற்படுத்தும். சீனா தனது கைவசம் இருக்கும் அமெரிக்க பாண்டுகளை ஒரேயடியாக விற்றால் அது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையே தரும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறது. இருப்பினும், அப்படிச் செய்தால் அமெரிக்கா மீதான சீனாவின் பிடி இல்லாமல் போய்விடும் என்றும் அது சீனாவுக்குப் பிரச்சினையாகவே என்கிறார்கள் வல்லுநர்கள்! இதன் மூலம் அமெரிக்கா மட்டுமின்றி உலக பொருளாதாரம் எந்தளவுக்கு ஒன்றுடன் ஒன்று பிணைந்து இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+