Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாழடைந்துபோன ஏகேடி பிறந்த வீடு! இலங்கை அதிபர் பிறந்த மருத்துவமனையா இது? வியக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

மாத்தளை: இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிறந்த வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தள பக்கத்தில் டிரெண்ட் ஆவதை தொடர்ந்து அந்த வீட்டைத் தேடிப்போய் பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்து வருகின்றனர்.

உலக நாடுகள் சற்றும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி இலங்கை அதிபராக அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 23ஆம் தேதி பதவியேற்றிருக்கிறார். இரு துருவ அரசியலுக்கு மட்டுமே அதிகம் பழகிப் போன இலங்கை மக்கள் இந்த முறை அநுரகுமாரவை அதிபராகத் தேர்வு செய்து பெரிய மாற்றம் என்றே சொல்லப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடாக இலங்கையில் கம்யூனிஸ்ட் பின்புலம் கொண்ட ஒரு கட்சி ஒன்று அதிகாரத்திற்கு வந்துள்ளது. அதுவும் வலதுசாரி கருத்தாக்கம் கொண்ட இந்திய ஆட்சியாளருக்கு எதிர் துருவத்தில் உள்ள ஒரு கொள்கை வெற்றி பெற்றுள்ளது என இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் உற்சாகமாக விவாதித்து வருகின்றனர்.

sri lankan anura kumara dissanayake

கடந்த தேர்தலில் 3% வாக்குகளைத் தான் அநுர பெற்றார். இந்த முறை அப்படியே நிலைமை தலைகீழாகி உள்ளது. அவர் இந்த முறை நடந்த ஜனாதிபதி தேர்தலில் 5,740,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இளம் வயதிலேயே இலங்கையில் 10ஆவது ஜனாதிபதியாக அவர் தேர்வானதை அனைத்து தரப்பு மக்களும் நல்ல வாய்ப்பாகக் கருதிவருகின்றனர்.

அவர் இலங்கை பொருளாதார நெருக்கடியைச் சரி செய்வேன் என்றும் வரி சுமையைக் குறைப்பேன் என்றும் உணவுப் பொருள்கள் மீதான வரியை முழுமையாக விலக்குவேன் என்றும் அளித்த வாக்குறுதியை நம்பி மக்கள் இந்த வெற்றிவாய்ப்பை அவருக்கு அளித்துள்ளனர். சாதாரண நிலையிலிருந்து வளர்ந்து வந்த அநுர, குடும்ப ஆதிக்கம் நிறைந்த இலங்கை அரசியலில் இந்தளவுக்கு உயர்ந்தது மிகப்பெரிய சாதனை. அதனால்தான் அவரைப் பற்றிய இதுவரை அறியாத பல செய்திகள் புதிது புதிதாக இலங்கை ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இலங்கையில் தம்புத்தேகம பகுதியில் உள்ள அனுரகுமார திஸாநாயக்கவின் சொந்த வீடு பற்றி முன்பே சில தகவல்கள் வெளிவந்தன. அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள் இங்கே ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருவது பற்றிய செய்தி தெரியவந்தது. இந்நிலையில்தான் அநுர பிறந்த வீடு ஒன்று இப்போது இலங்கை மக்களால் அதிகம் தேடப்படும் விசயமாக மாறியுள்ளது. பல யூடியூபர்கள் அந்த வீட்டுக்குச் சென்று காணொளி எடுத்து வெளியிட்டு வருகின்றன.

sri lankan anura kumara dissanayake

இலங்கை அதிபர் அநுர பிறந்த ஊர் கலேவெல. இது மாத்தளை மாவட்டத்தில் அம்பேபுஸ்ஸ-திருகோணமலை அருகே உள்ளது. ஆனால், அநுர சிறுவயதில் பள்ளிப் படிப்பை தம்புத்தேகம கிராமத்தில்தான் மேற்கொண்டார். இந்த கலேவெல என்பது ஒரு அழகான சின்னஞ்சிறிய கிராமம். அந்த ஊருக்குப் போகும் பாதைகள் இன்று மிக இயற்கைக் காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. வீடுகள்கூட நெருக்கமாக இல்லாமல் தள்ளித் தள்ளி உள்ளன. கொழும்பில் உள்ள மக்களே இந்த மாதிரியான ஒரு கிராமத்தைப் பார்த்தது இல்லை என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது உள்ளது.

இந்த ஊருக்குப் போகும் வழியில்தான் ஜனாதிபதி அநுர பிறந்த மருத்துவமனை இப்போதும் பழமை மாறாமல் அப்படியே உள்ளது. இந்த மருத்துவமனை தேவஹூவ என்ற ஊரில்தான் உள்ளது. இப்போதும் இந்த மருத்துவமனைக்கு மக்கள் வருகிறார்கள். இந்தப் பகுதியில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் நிறைய மக்கள் உள்ளனர். இங்கே இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில்தான் அநுர பிறந்த கிராமம் இருக்கிறது.

ஜனாதிபதி அநுர பிறந்தது ஒரு சாதாரண ஓட்டு வீடு. அங்கே சுற்றிலும் தேக்கு மரங்கள் உள்ளன. நிறைய எலுமிச்சை கன்றுகள் காய்த்துள்ளன. வீட்டில் சுற்றுச் சுவர் கூட இல்லை. பாழடைந்து போய் கேட்பாரற்று கிடக்கிறது. அங்கே உள்ள மக்கள் கூட இந்த வீடு பற்றிய அதிகம் அறிந்து வைத்திருக்கவில்லை. நடுக் காட்டில் ஆதரவு இல்லாமல் ஒரு வீடு கிடந்தால் எப்படி இருக்குமோ அதே தோற்றத்தில் உள்ளது.

sri lankan anura kumara dissanayake

இவர் ஜனாதிபதியானது முதல் இந்த வீட்டை ஊடகத்தினர் பலர் படையெடுத்து வந்து வீடியோ பதிவு செய்கிறார்கள். சமூக வலைத்தளத்திலும் இந்தப் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீட்டை இலங்கை தமிழ் யூடியூபர் ஆர்.ஜே சந்துரு நேரில் பார்வையிட்டு வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் வெளியான முதல் பதிவு என்று இதை அவர் சொல்கிறார்.

இந்தக் கலேவெல கிராமத்தை விட்டு அநுர குடும்பம் ஏன் வெளியேறியது? இதை ஏன் பராமரிப்பு இல்லாமல் போட்டு வைத்துள்ளனர் என்பதற்கு விடை இல்லை. இந்தப் பகுதியில் இளநீர் கடை போட்டுள்ள வியாபாரி ஒருவர் அநுரவின் அம்மா வழி பாட்டி இங்கேதான் வாழ்ந்தார் என்று சொல்கிறார். இந்த ஊர் கொழும்பிலிருந்து 153 கிமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

இந்த வீட்டிலிருந்து 1கிமீட்டர் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அதில்தான் முதன்முதலாக தனது பள்ளிப் படிப்பை அநுர தொடங்கி இருக்கிறார். அந்தக் கட்டடமும் இப்போதும் ஓடு வேய்ந்ததாகவே உள்ளது. பெரிய அளவு மாற்றம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் இதைப்போன்ற பள்ளிகளை 30 ஆண்டுகள் முன்பாக பார்க்க முடியும். அந்தளவுக்கு இலங்கை தமிழகத்தைவிட பின் தங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+