செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை; வால்ட் டிஸ்னி அதிரடி நடவடிக்கை!!
புளோரிடா: உலகம் முழுவதும் பொதுமக்கள் கூடும் பல இடங்களில் செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் வால்ட் டிஸ்னியும் அதிரடியாக தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உலகின் மாபெரும் தீம் பார்க்குகளில் வால்ட் டிஸ்னியும் ஒன்று. வால்ட் டிஸ்னி வேர்ல்டு என அழைக்கப்படும் இந்த கேளிக்கை பூங்காக்கள் புளோரிடாவின் ஆர்லண்டோ, கலிபோர்னியா, ஹாங்காங். பாரீஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.

இந்த வால்ட் டிஸ்னி உலகில் 4 பொழுதுபோக்கு பூங்காக்களும், 2 நீர் பூங்காக்களும், 24 ஓய்வு விடுதிகளும், இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டு மைதானங்கள் உள்பட பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணி்கள் குவிந்து வரும் முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்டாக வால்ட் டிஸ்னி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் நாளை முதல் ஸ்மார்ட்போன்களில் செல்பி போட்டோ எடுத்துக் கொள்ள உதவும் செல்பி ஸ்டிக்குகளை தீம் பார்க்கிற்குள் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது வால்ட் டிஸ்னி.
உலகம் முழுவதிலுமுள்ள பல முக்கிய அருங்காட்சியகத்திற்குள்ளும் செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன், பாரீஸில் உள்ள வெர்செய்ல்ஸ், ரோமில் உள்ள கொலோஸியம் மட்டுமல்லாது முக்கிய இசை திருவிழாக்களான கோச்செல்லா, லொலாபலூசா மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோக்களிலும் செல்பி ஸ்டிக்குகளுக்கு தடை நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications