27 பணியாட்கள், ஒரு செஃப், சொகுசு மாளிகை! ரூ 3300 கோடி சொத்துகளுடன் உலகின் பணக்கார நாய்!

Subscribe to Oneindia Tamil

ரோம்: உலகிலேயே ரூ 3300 கோடி மதிப்பு கொண்ட பணக்கார நாய் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இத்தாலியில்தான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் வசித்து வருகிறது. இதற்கு பெயர் கந்தர் ஆகும்.

நாய் நன்றியுள்ள ஜீவன். மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டதாகும். எஜமானருக்கு விசுவாசமாகவும் இருக்கும். நாய்களை காவலுக்காக வளர்ப்பதை காட்டிலும் தற்போது வீட்டு படுக்கையறையில் ஒரு குழந்தையை போல் படுக்க வைத்து பார்த்துக் கொள்கிறார்கள்.

world international italy

வெளிநாட்டு நாய்கள் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ஜெர்மன் ஷெப்பர்ட் வகையாகும். இது பாக்ஸ் டெரியனை போன்றது. முகம் ஷார்ப்பாக இருக்கும். லேசாக நரி போல் இருக்கும்.

இந்த நாய்க்கு ரூ 3300 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறதாம். நம்புவீர்களா? இந்த நாயை கவனித்துக் கொள்ள 27 வேலையாட்கள் இருக்கிறார்களாம். விதவிதமான இறைச்சிகளைத் தயாரிக்க சொந்தமாக ஒரு செஃப் இருக்கிறாராம். இந்த நாய் எங்கு செல்ல வேண்டுமானாலும் பி.எம்.டபிள்யூ காரில்தான் செல்வாராம்.

இதன் பெயரில் ஒரு பிரைவேட் ஜெட், வசிப்பதற்கு அரண்மனை போல் வீடு என ராஜபோக வாழ்க்கையை வாழ்கிறது கந்தர். இந்த நாய்க்கு இத்தனை கோடி சொத்து எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்வோம். 1992 ஆம் ஆண்டு கார்லோட்டா என்ற பணக்கார பெண் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். அவர் திடீரென இறந்துவிட்டார்.

இதையடுத்து தனது 80 மில்லியன் டாலர்கள் சொத்தையும் தனது செல்லப்பிராணியான கந்தர் III என்ற நாய்க் குட்டிக்கு எழுதி வைத்துவிட்டு சென்றார். இந்த சொத்தை கவனித்துக் கொள்ள இத்தாலி நாட்டு தொழிலதிபரும் அந்த பெண்ணின் குடும்ப நண்பருமான மொரிசியோ மியான் என்பவரை டிரஸ்டியாக நியமனம் செய்தார்.

கார்லோட்டா விட்டுச் சென்ற 80 மில்லியன் டாலர் மொரிசியோ மியானின் நிர்வாகத்தால் 400 மில்லியன் டாலராக பெருகியது. இதன் இந்திய மதிப்பு ரூ 3300 கோடியாகும். இத்தாலி நாட்டு வரிவதிப்பில் இருந்து தப்பிப்பதற்காகவே இப்படி ஒரு டிரஸ்ட்டை மியான் உருவாக்கியிருக்கிறார்.

இந்த கந்தர் III என்ற நாய் மறைந்துவிட்டது. அதன் பிறகு கந்தர் 4, கந்தர் 5 க்கு பிறகு தற்போது இருக்கும் கந்தர் VI என்ற நாய்தான் இத்தனை சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. இந்த நாயின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு கந்தர் மில்லியன்கள் என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு இந்த படம் நெட்பிளக்ஸில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+