இஸ்ரேலை ஏன் ஏவுகணைகளால் வீழ்த்த முடியாது தெரியுமா? காரணமே இதுதான்.. ‛அயர்ன் டோம் சிஸ்டம்’னா என்ன?
இஸ்ரேல்: இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டை ஏவுகணையால் வீழ்த்த முடியாது என்பதும், அந்த நாட்டில் உள்ள ‛அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம்' என்பது பாலஸ்தீனர்களுக்கு பதிலடி கொடுத்து பதற வைப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து நடந்து வந்த மோதல் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பாலஸ்தீனர்கள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் காசா பகுதியில் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே பதற்றம் நிலவி வருகிறது. அதிகாலை முதல் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் நாட்டில் ஊடுருவியதாகவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ‛ஸ்டேட் ஆப் வார்' என்பதை அறிவித்துள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்க முழுவீச்சில் இஸ்ரேல் தயாராகிவிட்டது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்துக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் பாலஸ்தீனம் சார்பில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் கூட அது இஸ்ரேலை ஒன்றுமே செய்யாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது இஸ்ரேலின் அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம் தான். இந்த சிஸ்டம் என்பது இஸ்ரேலை நோக்கி வரும் ஏவுகணைகளை இடைமறிப்பதில் 96 சதவீதம் வரை வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாலஸ்தீனர்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் கூட அதனால் இஸ்ரேலுக்கு பெரிய இழப்பு என்பது ஏற்படாது என கூறப்படுகிறது.
இப்படி எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடைமறித்து முடங்க செய்யும் இந்த ‛அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டம்' குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 2006ல் ஹெஸ்பொல்லா போரின் போது இஸ்ரேல் நாட்டின் நகரங்கள் மீது லெபனான் நாட்டில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பிறகு 2007 ல் காசா பகுதியை கைப்பற்றிய பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் 2007 ல் தாக்குதல் நடத்தினர். இத்தகைய தாக்குதலை தடுக்கும் நோக்கத்தில் ‛அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டம்' என்பது இஸ்ரேலில் இயங்கி வரும் ரபேல் அட்வான்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ் மூலம் அமெரிக்க உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2011 முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த ‛அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டம்' என்பது டிரக் மூலம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும். ரேடார் வழிக்காட்டுதல் மூலம் வானில் பறந்து வுரும் ஏவுகணைகள், ட்ரோன்களை கண்காணித்து இடைமறித்து தாக்குதல் நடத்தி வெடிக்க செய்யும் திறன் இதற்கு உண்டு. மேலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் தன்மையும் இதற்கு உள்ளது.
முதலில் ‛அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டம்' என்பது அது இருக்கும் இடத்தில் இருந்து வானில் 4 முதல் 70 கிமீ தொலைவு வரையிலான ஏவுகணைகளை கண்காணித்து இடைமறிக்கும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அதன் திறன் என்பது இன்னும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பு என்பது மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வரும் ஏவுகணைகளை கணினி உதவியுடன் கண்காணித்து இடைமறித்து தாக்குதல் நடத்தும். மாறாக ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏவுகணை சென்றால் அதனை விட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் அயர்ன் டோம் டிபென்ஸ் சிஸ்டத்துக்கு அதிக நிதி செலவாகும். ஒரு ஏவுகணையை இடைமறித்து சுட்டு வீழ்த்துவதற்கும், இடைமறிப்புக்கும் அதிக செலவாகும். ஆனால் கடந்த 10 ஆண்டு நிலவரப்படி ஏவுகணை தாக்குதல்களை இடைமறிப்பதில் இந்த அயர்ன் டோம் ஏர் டிபென்ஸ் சிஸ்டத்தின் சக்சஸ் ரேட் என்பது அதிகமாக இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் பென்டகன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது.
மேலும் கடந்த 2020ல் அமெரிக்க இராணுவத்திற்கு இரண்டு அயர்ன் டோம் பேட்டரிகள் வழங்கப்பட்டது. ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்த சிஸ்டத்தை வழங்கும்படி உக்ரைனும் கோரிக்கை வைத்துள்ளது. ஆனாலும் இஸ்ரேல் இந்த அமைப்பை உக்ரைனுக்கு வழங்கவில்லை. இதுதவிர 2017 முதல் கப்பல்கள் மற்றும் கடலில் உள்ள நாட்டின் சொத்துகளை பாதுகாப்பதிலும் இது முக்கிய பங்கு வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications