எங்களைப் பார்த்து பயப்படாதீங்க !! மேற்கத்திய நாடுகளுக்கு சொல்கிறார் ரஷ்ய அதிபர் புதின் !!!
மாஸ்கோ : ரஷ்யாவைப் பார்த்து மேற்கத்திய நாடுகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த நாளிதழுக்கு புதின் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது...

என்னை பொறுத்தவரையில் ரஷ்யாவை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை என்றுதான் சொல்லுவேன். உலகம் இன்றைக்கு மாறிவிட்டது. நீங்கள் நினைப்பதை போல ஒரு மிகப்பெரிய ராணுவ போரை இன்றைக்கு மக்கள் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள்.
நாம் வேறு பல திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருக்கிறது. நேட்டோ நாடுகளை ரஷ்யா தாக்கும் என யாரும் நினைக்க மாட்டார்கள். அப்படியே யாராவது நினைத்தால் அவர் நோயாளியாகத்தான் இருப்பார். அதுவும் அந்த நோயாளி தூக்கத்தில் தான் அப்படி நினைக்கக்கூடும்.
நேட்டோ உறுப்பு நாடுகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகை ரஷ்யாவை விட 10 மடங்கு அதிகமாகும். உதாரணத்திற்கு அமெரிக்க ராணுவ பட்ஜெட் உலகிலேயே மிகப்பெரியது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இவ்வாறு இத்தாலி நாளிதழுக்கு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications