எங்க நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது... நேபாள பிரதமர் ஷர்மா ஒளி வார்னிங்
காத்மண்டு: தங்களது நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்று நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி கடுமையாக எச்சரித்துள்ளார்.
நேபாளம் இந்து நாடாக இருந்த போதும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசியல் சாசனத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அரசு பரிந்துரைத்தது.
இதனை நேபாளம் நிராகரித்தது. இதன் பின்னர் நேபாளத்தில் இந்திய வம்சாவளியினராகிய மாதேஸிகள் தாங்கள் புதிய அரசியல் சாசனப்படி இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டுள்ளதாக கூறி கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இது பெரும் வன்முறையாக வெடித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து மாதேஸிகள் வசிக்கும் எல்லைப் பகுதி வழியாக நேபாளத்துக்குள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.
இதனால் நேபாளத்தின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்தியா மறைமுகமாக தங்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பதாக கூறி போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில் நேபாளத்துக்கு சீனா கை கொடுத்து உதவ ஆரம்பித்தது. சீனாவில் இருந்து எரிபொருட்கள் நேபாளத்துக்கு வரத் தொடங்கியது.
அதே நேரத்தில் மாதேஸிகளின் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையையும் நேபாளம் தீவிரப்படுத்தியது. இதில் நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் பலியானது இருநாடுகளின் உறவில் மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த சில மணிநேரங்களிலேயே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் ஷர்மா ஒளி, எங்களது அரசியல் சாசனம் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல.. எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் இருநாடுகளிடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications