பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற பதில் தாக்குதல் நடத்த ரெடி: நவாஸ் ஷெரிப் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம் மீது இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் ஆனால் அதை எங்கள் பலவீனமாக கருதக்கூடாது என்று ம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பாகிஸ்தான் மக்களை காப்பாற்ற, பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த தயங்காது என்றும், இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், அது பாகிஸ்தான் ராணுவத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனவும், நவாஸ் ஷெரிப் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications