ஒரு பக்கம் போர்க்கப்பல், மறுபக்கம் பேச்சுவார்த்தைக்கும் துண்டு.. வட கொரியாவை சீண்டும் டிரம்ப்?
வடகொரியா-அமெரிக்கா நடுவேயான வார்த்தை சண்டை, இன்னொரு உலகப்போர் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகளைத் தள்ளியுள்ளது.
வாஷிங்டன்: வடகொரியாவிற்கு எதிராக மிகப்பயங்கரமான ராணுவ நடவடிக்கைகளில் அதகளம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், திடீரென அந்நாட்டு அதிபரை சந்திக்க தயார் என தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா.தீர்மானங்கள் உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.இப்போதுகூட 6 வது முறையாக அணுகுண்டு சோதனை செய்வோம் என்று உலக நாடுகளை அது அச்சுறுத்தி வருகிறது. இதனால் அந்நாடு மீது அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாத வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்வதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அமெரிக்கா வந்தால் அவரை சந்திக்க தயார் என டொனால்டு டிரம்ப் கூறிஇருக்கிறார்.
அமெரிக்காவின் கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை கொரிய கடற்பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி உள்ள நிலையில் ட்ரம்ப் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.இருநாட்டு அதிபர்களும் சந்திப்பு நிகழ்த்த காலம் கனியவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications