இன்று சரணடையும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்.. என்னது 20 ஆண்டுகள் சிறையா? என்ன நடக்கப்போகிறது?
ஜார்ஜியா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அட்லாண்டா சிறையில் சரணடைய இருப்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்த டொனால்ட் டிரம்ப், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார். எனினும், இந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தேர்தல் வெற்றியை ஜோ பைடன் தன்னிடமிருந்து அபகரித்துக்கொண்டதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

தேர்தல் முடிவுகளுக்கு சான்றளிக்கும் நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் கடந்த 2021 ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில் உறுதி செய்தது.
ஜார்ஜியா மாகாணத் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஜார்ஜியா நீதிமன்றமும் உறுதி செய்தது. தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 19 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டது. அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிர்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபர் டிரம்ப். டிரம்ப் உள்ளிட்ட 19 பேரும் வெள்ளிக்கிழமைக்குள் சரணடைய உத்தரவிடப்பட்டது.
டொனால்ட் டிரம்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடால்ப் கியுலியானி புதன்கிழமை அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். முன்னாள் பெடரல் வக்கீலும் நியூயார்க் நகர மேயருமான கியுலியானி, 150,000 அமெரிக்க டாலர்கள் பிணையாகச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.
2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் டிரம்ப், "நான் வியாழன் அன்று ஜார்ஜியா நீதிமன்றத்தில் சரணடைவேன்" என்று தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் உறுதியானால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் கேள்விக்குறியாகி விடும்.
எனினும், 2,00,000 அமெரிக்க டாலர்கள் பிணை பத்திரம் செலுத்த ஒப்புக்கொண்டால் டிரம்ப் ஜாமீனில் விடுவிக்கப்படுவார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அட்லாண்டா சிறையில் சரணடைய இருப்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications