“மாற்றங்களை ஏற்படுத்த முதலீடுகள் மட்டும் போதாது.. அனைவரும் ஒன்றிணைவோம்” - ப்ரீத்தி அதானி அழைப்பு

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: 'AVPN உலக மாநாடு 2025' ஹாங்காங்கில் நடைபெற்றது. அதானி அறக்கட்டளையின் தலைவரான டாக்டர் ப்ரீத்தி அதானி, இதில் முக்கிய உரை நிகழ்த்தினார். அவரது உரை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

நிதி வழங்குவோர் மற்றும் சமூக மாற்றத்தை விரும்புவோர் வெறும் பணம் கொடுப்பதை தாண்டி, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ப்ரீத்தி அதானி வலியுறுத்தியுள்ளார்.

Adani china

அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே உண்மையான தாக்கம் ஏற்படும் என டாக்டர் அதானி குறிப்பிட்டார். தனியாகச் செயல்படுவதை விடுத்து, கூட்டாகச் செயல்படுவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்துப் பேசிய அவர், "வெறும் பணம் மட்டும் கொடுக்காதீர்கள். ஒன்றாகச் சேர்ந்து உருவாக்குங்கள்," என்று தெரிவித்தார்.

இதுகுறித்து டாக்டர் அதானி மேலும் கூறுகையில், "நாம் வெறும் நன்கொடையாளர்கள் மட்டுமல்ல, கூட்டாக உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும். ஆதாரங்களைப் பகிர்ந்துகொண்டு, தடைகளை உடைத்து, கூட்டாளிகளாகச் செயல்படும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்," என்றார். மேலும், நிதிப்பங்களிப்பைத் தாண்டி, உலகளாவிய ஒத்துழைப்புத் தளத்தை உருவாக்கவும் அவர் முன்மொழிந்தார்.

"தாக்கம் என்பது எண்களைப் பற்றியது மட்டுமல்ல. நம்பிக்கை, மாற்றம் மற்றும் மேம்பாட்டின் வரலாற்றை பற்றியது," என அவர் விளக்கினார். இம்மாநாட்டின் கருப்பொருள் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மீள்தன்மை என்பதாக இருந்தது. அதற்கு டாக்டர் அதானியின் பேச்சு வலு சேர்த்தது.

AVPN தலைமை நிர்வாக அதிகாரி நைனா சுப்பர்வால் பத்ரா, டாக்டர் அதானியின் உரையை "துணிச்சலான நடவடிக்கைக்கு ஒரு சக்திவாய்ந்த அழைப்பு" என்று பாராட்டினார். "அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதன்மூலம் உறுதியைச் செயலாக மாற்றி, காலத்தின் சோதனையைத் தாங்கும் அமைப்புகளை உருவாக்க முடியும்," என்றும் அவர் தெரிவித்தார்.

டாக்டர் அதானி தனது உரையில், கூட்டாக உருவாக்குதல், பயனாளிகளை விட பன்மடங்கு விளைவுகளை ஏற்படுத்துதல், மற்றும் திறமைகளை மதிப்புகளுடன் இணைத்தல் என மூன்று முக்கிய கொள்கைகளை எடுத்துரைத்தார். நிதிப்பங்களிப்பாளர்கள் வெறும் நன்கொடையாளர்களாக மட்டும் இல்லாமல், நீடித்த மாற்றத்தை உருவாக்கும் சிற்பிகளாக செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தனிநபர்களை மாற்றத்தின் முகவர்களாக மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழில்முறை நிபுணத்துவம் நெறிமுறை நோக்கங்களுடன் பிணைக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தனது உரையை நிறைவு செய்யும் வேளையில், டாக்டர் அதானி அனைவரும் செயலில் இறங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். "இது கைதட்ட வேண்டிய தருணம் அல்ல. இது உறுதியளிக்க வேண்டிய தருணம்!" என அவர் தெரிவித்தார்.

டாக்டர் அதானி மேலும் கூறுகையில், "வறட்சியில் விதைத்து, மழை வருவதற்கு முன்பே, அனைவருக்கும் கண்ணியம் மற்றும் வாய்ப்புகளின் அறுவடையை உருவாக்கிய தலைமுறையாக நாம் இருக்க வேண்டும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+