400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகள்... புத்தாண்டு தினத்தன்று புதிய சாதனை: துபாய் திட்டம்
துபாய்: வரும் புத்தாண்டு அன்று பிரமாண்ட வான வேடிக்கைகள் நடத்தி கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது துபாய்.
விதவிதமான சாதனைகள் புரிந்து கின்னஸில் இடம் பெறுவது ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒன்றும் புதிதான விஷயமல்ல. அந்தவகையில் வரும் புத்தாண்டு அன்று மிகப் பிரமாண்டமான வான வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தி புதிய உலக சாதனை நிகழ்த்த துபாயில் திட்டமிடப்பட்டுள்ளாது.
இந்த சாதனைக்கான ஆயத்த வேலைகள் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்...
ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் எண்ணெய் வளம் மிகுந்த துபாய், தன் பங்கிற்கு புதிய சாதனையை வரும் புத்தாண்டன்று நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

சாதனைத் திட்டம்....
அதன்படி, புத்தாண்டு தினத்தன்று மாலை மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆயத்த நடவடிக்கைகள்....
இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவேடிக்கை வீரர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். இவர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்த திட்டமிட்டுள்ளனர்.

வித்தியாசமான பட்டாசுகள்....
இந்த வானவேடிக்கை நிகழ்ச்சியில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என பிரம்மாண்டமான , வித்தியாசமான பல அம்சங்கள் நடத்தப் பட உள்ளது.

தக்க பாதுகாப்பு...
அதேசமயம் இந்த பிரம்மாண்ட வானவேடிக்கையைப் பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் எனவும் துபாய் நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications