துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டரில் 5.3 ஆக பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்தான்புல்: துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்ட்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.3 அளவுக்கு பதிவான இந்த நிலநடுக்கம், அந்நாட்டின் தென்மேற்கே உள்ள ஏஜியன் கடலோரத்தில், போட்ரம் என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து, 15 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் உணரப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Earthquake of 5.3 magnitude shakes southwest Turkey

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், நில அதிர்ச்சியை உணர முடிந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதேசமயம், சேத விவரங்கள் உடனடியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நிலநடுக்கம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
U.S. Geological Survey said, An earthquake with a magnitude of 5.3 shook southwestern Turkey near the Aegean coastal town of Bodrum on Today.
Please Wait while comments are loading...