செல்லக்குட்டி இஸியுடன் த்ரிஷா செய்த அலப்பறை! அதிர வைத்த வீடியோ.. ₹10 கோடி சொகுசு வீட்டின் மினிமலிசம்
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் 'எவர்கிரீன்' நாயகியான த்ரிஷா, தனது இயல்பான நேர்த்தியையும் காலத்தால் அழியாத அழகையும் தனது நடிப்புத் திறனில் மட்டுமன்றி, தான் வாழும் இல்லத்தின் வடிவமைப்பிலும் முத்திரையுடன் பிரதிபலித்துள்ளார். அவரது வீட்டின் நேர்த்தியும் மினிமலிசம் குறித்த தகவல்கள் பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகை த்ரிஷா.. 2002ல் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா சுமார் 24 ஆண்டுகளுக்கு மேலாக டாப் நடிகையாக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி விஜய், தல அஜித் என டாப் ஹீரோக்கள் அனைவருடைய படங்களிலும் த்ரிஷா நடித்திருக்கிறார்.

த்ரிஷா
இதற்கிடையே 'டைம்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' த்ரிஷாவின் வீடு தொடர்பாகச் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது. சுமார் ₹10 கோடி மதிப்புள்ள த்ரிஷாவின் இந்தச் சொகுசு இல்லம், தனித்துவமான ரசனையுடனும் மினிமலிச ஆடம்பரத்துடனும் கட்டமைக்கப்பட்டுள்ளது. த்ரிஷாவின் வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவரது தனிப்பட்ட விருப்பங்களையும், எளிமையான அதேநேரம் பிரம்மாண்டமான வாழ்க்கை முறையையும் காட்டும் வகையில் உள்ளது.
கலர் டோன்கள்
த்ரிஷா தனது வீட்டின் வண்ணத் தேர்வில் இயற்கையான மண்வாசனை டோன்களை, அதாவது ஆங்கிலத்தில் Earthy tones என்பார்கள். அதையே கையாண்டுள்ளார்.. வீட்டில் ரஸ்ட் ஆரஞ்சு, பெய்ஜ், பிரவுன் மற்றும் மியூட்டட் கோல்டு போன்ற கலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரவுன் நிறத் திரைச்சீலைகளுக்கு நடுவே, செங்கல் சிவப்பு நிற சோபாக்கள் வீட்டின் வரவேற்பறைக்கு அதீத ஆடம்பரத்தைக் கொடுக்கின்றன. எங்குமே ஓவர்-தி-டாப் ஜாம்பவான் தனம் இல்லாமல், பார்ப்பதற்கு மிகவும் லெவலாக அறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
'கருப்பு' பட ஸ்டாரான த்ரிஷாவுக்குப் பூக்கள் மீது காதல் உண்டு. வெறும் அழகுக்காக மட்டுமில்லாமல், தனது வாழ்விடத்தின் ஒரு அங்கமாகவே துடிப்பான வண்ண மலர்களை லிவிங் ரூமில் அவர் நேர்த்தியாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படி அவர் வீடு முழுக்க மினிமலிச ஆடம்பரமே இருக்கிறது. வீட்டின் சுவர்கள் மற்றும் மூலைகள் த்ரிஷாவின் தனிப்பட்ட ரசனையை காட்டுகின்றன.
விண்டேஜ்
நவீன ஓவியங்கள், அப்ஸ்ட்ராக்ட் கலைப் படைப்புகள் மற்றும் அவர் சேகரித்த விண்டேஜ் கலைப் பொருட்கள் வீட்டின் இன்டீரியருக்கு ஒரு ஸ்டைலிஷ் கேரக்டரைத் தருகின்றன. நடிகைகளுக்கே உரிய பிரத்தியேக வசதியுடன், த்ரிஷாவின் ஆடம்பரமான ஆடைகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பிராண்டட் ஹேண்ட்பேக்குகள் நிறைந்த ஒரு மெகா வாக்-இன் க்ளோசெட் இந்த வீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்ல நாய்
த்ரிஷா தனது செல்ல நாய் குட்டியான இஸியுடன் வொர்க்அவுட் செய்யும் அறையில், மரத்தாலான தரைத்தளம், பெய்ஜ் திரைச்சீலைகள் மற்றும் ஒரு அழகான பெட் வசதி செய்யப்பட்டுள்ளது. "மம்மி ஸ்குவாட்ஸ் போடும்போது அவளுடைய ஷூ லேஸ்களை நான் கடிக்கக் கூடாதாம்" என்று இஸியின் மைண்ட் வாய்ஸ் பாணியில் த்ரிஷா இன்ஸ்டாவில் போட்ட வீடியோ இங்கிருந்து எடுக்கப்பட்டது தான்.
கடந்த நவம்பர் 2025-ல் தனது செல்லக்குட்டி இஸியின் பிறந்தநாளை த்ரிஷா வீட்டின் பின்புறம் தான் கொண்டாடி இருந்தார். அடர்ந்த பச்சை மரங்கள் மற்றும் சிறிய செடிகளால் சூழப்பட்ட ஒரு மெகா ஸ்பேஸ் அங்கு இருக்கிறது..
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications