இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவு.. சுனாமி வார்னிங் இல்லை
இந்தோனேசியா: இந்தோனேசியா சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.2 என பதிவாகி உள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா இருப்பதே இதற்கு காரணமாகும்.
இந்நிலையில், இந்தோனேசியா மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள புக்கிட்டிங்கி பகுதியில் இன்று அதிகாலை 1.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக அருகே உள்ள கிசார் தீவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆட்டம் கண்டன. வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டன.

ஓடிய மக்கள்
இதனால் பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து கண்விழித்து சத்தம்போட்டு கொண்டு வீடுகளை விட்டு ஓடினர். சிலர் தங்களது உடைமைகளோடு வீடுகளில் இருந்து வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். மேற்கு பாசமான் மாவட்ட மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ரிக்டரில் 6.2
நிலநடுக்கத்தில் பாதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில், ‛‛புக்கிட்டிங்கி வடமேற்கு பகுதியில் 66 கிலோமீட்டர் தொலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி இருந்தது'' என கூறியுள்ளது.

சுனாமி ஆபத்து இல்லை
இதுகுறித்து இந்தோனேசியாவில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛‛இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து இல்லை. இருப்பினும் நிலநடுக்கம் பற்றி கவனிக்கப்பட்டு வருகிறது'' என்றார். இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலான நிலநடுக்கங்கள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. சில நிலநடுக்கங்கள் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.

இதற்கு முன் எப்படி
கடந்த ஆண்டு ஜனவரியில் 6.2 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மேற்கு சுலவாசி மகாணத்தில் 105 பேர் இறந்தனர். 6,500 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டில் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தான் சுனாமி உருவானதாக கூறப்படுகிறது. அப்போதைய சுனாமியின் போது இந்தியா உள்பட 12 நாடுகளில் பல்வேறு இடங்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications