திடீரென குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.3 என பதிவு
காபூல்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. தாலிபான்களை இன்னும் பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தாலிபான்களின் பல்வேறு கட்டுப்பாடுகளால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவு 2.15 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 2.15 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 160 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.
ஆப்கானிஸ்தானில் இப்படி நிலநடுக்கம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அக்டோபர் 7 ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 2 ஆயிரம் மக்கள் இறந்தனர். மேலும் பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த துயரில் இருந்து படிப்படியாக ஆப்கானிஸ்தான் மீண்டு வரும் நிலையில் தான் தற்போதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications