இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு - 368 பேர் படுகாயம்
ரோம்: இத்தாலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாலி நாட்டின் மத்திய பகுதிகள் தெற்கு பகுதிகளில் இன்று அதிகாலை கடுமையான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தை, அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 3.36 மணிக்கு மக்கள் உணர்ந்துள்ளனர்.

ரோம் நகரத்தில் சுமார் 20 வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதை உணர முடிந்துள்ளது. முதலில் நில நடுக்கம் 6.4 ரிக்டர் அளவுக்கு கடுமையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இது 6.2 என்ற அளவுக்கு இருந்ததாக அமெரிக்க ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
அக்குமோலி, அமாட்ரைஸ் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குட்டிநகரமான அமாட்ரைசில், பாதி ஊர் தரைமட்டமாகிவிட்டதாக அந்நகர மேயர் கூறியுள்ளதில் இருந்து பாதிப்பின் தீவிரத்தை உணர முடியும்.

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 368 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். சேதம் அதிகம் என்பதால், உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை அடையாளம் காணுவதற்காக மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
2009ம் ஆண்டு இதே அளவுக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் தாக்கியதில், இத்தாலியில் சுமார் 300 பேர் உயிரிழந்தது நினைவு கூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications