பொருளாதார நெருக்கடி: இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..புது ரூல்சால் அவலம்
இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் தான் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கவும், இரவு 10 மணிக்கு மேல் திருமண மண்டபங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டமும் மின்விளக்குகள் இன்றி இருட்டில் நடந்த அவலம் ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. கடந்த ஆண்டு மோசமான நிலையை சந்தித்த இலங்கை தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்திக்க தொடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்தாலும் தற்போது நிலைமை இன்னும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு நடுவே மாறிய ஆட்சி
பாகிஸ்தான் பிடிஐ கட்சியின் தலைவரான இம்ரான் கான் பிரதமராக இருந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறிய நிலையில் இவரது ஆட்சி கவிழ்ந்தது. இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார். இவர் பிரதமரானபோது அவரது முன் உள்ள பெரிய சவால் என்னவென்றால் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பது தான். அதாவது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது தான் ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார்.

கரையும் அந்நிய செலாவணி
இருப்பினும் கூட நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், அந்நிய செலாவணி கையிருப்பு கரைவதை தடுக்கவும் அவரது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்பது பெரியளவில் கை்கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வரும் நிலையில் பணவீக்கத்தால் நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறைவால் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயு நிரப்பி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஆபத்தானது என தெரிந்தும் கூட வேறு வழியின்றி மக்கள் இதனை செய்து வருகின்றனர்.

புதிய உத்தரவு
தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறும் ஒரு மாத இறக்குமதிக்கு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தற்போது புதிய உத்தரவை போட்டுள்ளது. அதன்படி நாட்டில் நிலவும் மின்தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மால்களும், மார்க்கெட், கடைகளும் இரவு 8.30 மணிக்குள் மூடிவிட வேண்டும். திருமண மண்டபங்களை 10 மணிக்குள் மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பெரும்பாலான அந்நிய செலாவணி கையிருப்பு எரிபொருளுக்கு தான் செலவிடப்படும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவு ஏன்?
பாகிஸ்தானில் நேற்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. நாட்டின் பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில் நடந்த இந்த கூட்டத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய உத்தரவை பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நாட்டில் மார்க்கெட், மால்கள், கடைகள் என அனைத்தும் இரவு 8.30 மணிக்கு மூடப்பட வேண்டும். திருமண மண்டபங்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும். இதன்மூலம் மின்சாரம் சேமிக்கப்படும். இந்த நடவடிக்கையினால் ரூ.60 பில்லியன் வரை சேமிக்க முடியும் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) என்று கூறினார்'' .

வீட்டில் இருந்து பணியாற்ற..
மேலும் அவர் கூறுகையில், ‛‛நாட்டில் பிப்ரவரி 1 முதல் பல்புகளின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. மேலும் பேன் உற்பத்தியும் ஜூலை மாதம் முதல் நிறுத்தப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் ரூ.22 பில்லியன் வரை சேமிக்க முடியும். மேலும் அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான நடவடிக்கை பற்றி 10 நாளில் முடிவு எடுக்கப்பட உள்ளது'' என்றார்.

இருட்டில் அமைச்சரவை கூட்டம்
மேலும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் அனைத்து அரசு அமைப்புகள், துறைகள் மின்சாரப் பயன்பாட்டை உடனடியாக 30 சதவீதம் குறைக்க வேண்டும் என கூடுதலாக உத்தரவிட்டுள்ளார். இதனால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் கூட மின்விளக்குகள் பயன்படுத்தப்படவில்லை. அறையின் ஜன்னல் வழியாக கிடைத்த சூரியஒளி வெளிச்சத்தை பயன்படுத்தி இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கூட கூட்டம் நடந்த அறை போதிய வெளிச்சமின்றி இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications