அய்யோ நெஞ்சே பதறுதே.. ஈகுவடாரில் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! பிரசார கூட்டத்திலேயே பயங்கரம்
குய்ட்டோ: ஈகுவடார் நாட்டில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் ஈகுவடார் என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டின் எல்லையாக மேற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. இங்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது. மேலும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற நாடாக ஈகுவடார் உள்ளார்.

இந்த நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் அவர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தான் நேற்று அவர் தலைநகர் குயிட்டோவில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு வந்த நபர் அவரை துப்பாக்கியால் சுவ்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். இதில் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோ இறந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெர்னாண்டோ விலாவிசென்சியோவை யார் சுட்டுக்கொன்றது? இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளனவா? என்பது தொடர்பாக அந்நாட்டு விசாரணை அமைப்பு விசாரணையை தொடங்கி உள்ளது. இதுபற்றி ஈகுவடார் நாட்டின் தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ கூறுகையில், ‛‛இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விடாமட்டேன். அவர்களுக்கு சட்டத்தின் பலம் என்ன? என்பது முழுவதுமாக காட்டப்படும்'' என தெரிவித்துள்ளார்.
தற்போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ விலாவிசென்சியோவுக்கு 59 வயது ஆகிறது. திருமணமாகி மனைவி, 5 பிள்ளைகள் உள்ளனர். இவர் பில்ட் ஈக்குவடார் இயக்கத்தின் சார்பில் தேர்தலில் களமிறங்கினார்.
இவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தற்போது அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2007 முதல் 2017 வரை முன்னாள் அதிபர் ரஃபேல் கொரியாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழலுக்கு எதிராக இவர் தொடர்ந்து குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications