For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் 4500 ஆண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டம் கண்டுபிடிப்பு

எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    4500 ஆண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டம் கண்டுபிடிப்பு-வீடியோ

    கெய்ரோ: எகிப்தில் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ளது கீசா பீடபூமி. அப்பகுதியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    egypt discovers ancient kingdom cemetery

    இந்த கல்லறை தோட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்போதைய மன்னராட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பெனுய் கா மற்றும் நிவை என்ற அதிகாரிகளுடைய கல்லறைகளும் அங்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பழமையான கல்லறைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட சிலைகள், விலங்கு உருவங்கள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    English summary
    The Egyptian Antiquities Ministry, unveiled on Saturday a 4,500-year-old cemetery near the Pyramids of Giza, containing colorful wooden coffins and limestone statues dating back to the Old Kingdom.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X