66 பேர் பயணித்த எகிப்து விமானத்தை தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தார்களா?
பாரீஸ்: மெடிடெரேனியன் கடலில் விழுந்ததாக கூறப்படும் எகிப்து விமானத்தில் குண்டு இருந்து அது வெடித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தீவிரவாதிகளின் நாச வேலையாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 59 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புதன்கிழமை இரவு கிளம்பிய எகிப்து ஏர் நிறுவன விமானம் எம்.எஸ். 804 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் மெடிடெரேனியன் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே தெரிவித்தார்.
இதையடுத்து மெடிடெரேனியன் கடல் பகுதியில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. கடலில் மிதந்த சில பொருட்கள் விமான பாகங்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அது விமானத்தின் பாகங்கள் இல்லை என்று கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விமானம் வானில் பறக்கையில் குண்டு வெடித்துச் சிதறி கடலில் விழுந்திருக்கும் என்று கூறப்படுகிறது. விமானத்தின் பாகங்களோ அல்லது பயணிகளின் உடல்களோ கிடைத்தால் தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை உறுதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படி குண்டு வைத்திருந்தால் அது பயணிகள் இருக்கும் இடத்தில் அல்லது வேறு எங்கும் வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும். விமான விபத்திற்கு வெடிகுண்டு தான் காரணம் என்றால் பாரீஸ் விமான நிலையத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.
விமான விபத்திற்கு தீவிரவாத வேலை காரணமாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ள போதிலும் இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications