தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தியால் 2 மணி நேரம் மூடப்பட்ட ஈபிள் டவர்
பாரீஸ்: மர்ம வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்று இரண்டு மணி நேரம் ஈபிள் டவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது. பின்னர் நடத்தப் பட்ட தீவிர சோதனைகளுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததையடுத்து மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக ஈபிள் டவர் திறக்கப்பட்டது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது ‘ஈபிள் டவர்'. சுமார் 324 மீட்டர் உயரம் இரும்பினால் கட்டப்பட்ட இக்கோபுரத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காண வருகின்றனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான இக்கோபுரம் சுற்றுலா தளங்களில் ஒன்று. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம டெலிபோனில் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் ஈபிள் டவர் மூடப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல பொதுமக்கள் பார்வைக்காக ஈவிள் டவர் மீண்டும் திறக்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த மார்ச் 30-ந்தேதியும் இதேபோன்ற சம்பவத்தால் ஈபிள்கோபுரம் சிறிது நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications