பாலியல் பலாத்காரம் செய்து 8 வயது சிறுமி கொலை.. உடலை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து, சூட்கேசிஸ் அடைத்து வைத்த கொடூரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
லிமா: பெரு நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள ஹூவன்கயோ பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி எடித் பைடான் குயின்சோ. இவள் சான் பிரான்சிஸ்கோ டி ஆசிஸ் பள்ளியில் படித்து வந்தாள். இந்நிலையில் தன்னுடைய பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தன்னுடைய பெற்றோருடன் சென்றார். ஆண்டு விழா முடிந்தவுடன் எடித் தனது பெற்றோருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது தனது பாடபுத்தகத்தை பள்ளியிலேயே மறந்து வைத்துவிட்டார் எடித். இதையடுத்து அதை எடுத்துவிட்டு வந்துவிடுதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்ற எடித் வெகுநேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் பெரு தேசிய பல்கலைக்கழகம் அருகே ஒரு சூட்கேசை கேட்பாரற்று கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை சோதனை செய்து பார்த்த போது, ஒரு சிறுமியின் உடல் இருந்தது தெரியவந்தது. விசாரித்ததில் அது எடித் பைடான் குயின்சோ என்றும், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. குற்றவாளி குறித்து தகவல்களை அளிப்பவர்களுக்கு, 4500 யுரோ பரிசாக வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications