Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட்.. இம்ரான்கான் ஆதரவாளர்கள் வெற்றி? முடிவுகளை தாமதப்படுத்துவதாக பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: உச்ச கட்ட டென்ஷனுக்கு இடையே இன்று பாகிஸ்தானில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்று தெரிவிப்பதற்காக வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்தநிலையில், முடிவுகளை வேண்டும் என்றே தாமதம் செய்கிறார்கள் என இம்ரான் கான் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலை என அல்லோலப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Election held amid high tension, Who will be the next Prime Minister of Pakistan? Counting of votes begins

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம் ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் நேற்று அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடை பெற்றது. அதேபோல் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதேபோல் தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக முக்கிய இடங்களில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண் டிக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரி சையில் காத்திருந்து வாக்களித்தனர். முன்னாள் பிரதமர் இம் ரான்கானும் சிறையில் இருந்தபடியே தபால் மூலம் தனது வாக்கை செலுத்தினார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்தததும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் முடிவுகள் தாமதப்படுத்தப்படுவதாக இம்ரான்கானின் பிடிஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இம்ரான்கான் கட்சி வேட்பாளர்கள் வெற்றிமுகத்தில் இருப்பதால் பல இடங்களில் முடிவுகள் வெளியிடுவது அவசியம் இன்றி தாமதப்படுத்தப்படுவதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல இடங்களில் வாக்குச்சீட்டுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பறிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ள பிடிஐ கட்சி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. உச்ச கட்ட டென்ஷனுக்கு மத்தியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணும் பணி அதைவிட பரபரப்பாக பாகிஸ்தானில் சென்று கொண்டிருக்கிறது.பஞ்சாப் மாகாண தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்னிலை வகிக்கிறது. 2/3 என்ற பெரும்பான்மையுடன் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹம்மத் அசார் தெரிவித்துள்ளார். அதேபோல் பல இடங்களில் இம்ரான் கான் கட்சியினர் தாங்கள் பல முன்னிலை வகிப்பதாகவும் ஆனால், தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பிடிஐ கட்சி தனது எக்ஸ் தளத்தில் ஆதரவாளர்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:- தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் வர்லாற்று சிறப்பு மிக்க வெற்றியை பார்த்து அச்சம் அடைந்த மொத்த சிஸ்டமும் தற்போது தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளது. ஃபார்ம் 45 ஐ திருத்துகிறர்கள். பாகிஸ்தானியர்கள் தங்கள் ஓட்டுக்களை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும். வாக்கு மையங்களுக்கு செல்லுங்கல். தேர்தல் முறைகேடு நடப்பதை தடுத்து நிறுத்துங்கள்" என்று கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+