யானைகளுக்கும் மோப்ப சக்தி அதிகம்... கன்னி வெடிகளைக் கண்டறியும்... ஆய்வில் கண்டுபிடிப்பு
ஜோகன்னஸ்பர்க்: நிலத்தில் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் மோப்ப சக்தி யானைகளுக்கு உண்டென்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக துப்பறியும் வேலைகளுக்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்களே பயன்படுத்தப் படுகின்றன. ஏனெனில், அவற்றிற்கு மோப்ப திறன் அதிகமாக காணப் படுகிறது.
இந்நிலையில், யானைகளுக்கும் கன்னி வெடிகளைக கண்டுபிடிக்கும் மோப்ப சக்தி இருப்பது பிரிட்டோரியா விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கன்னி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து யானைகளின் மோப்ப சக்தி தொடர்பாக தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அசிட்டோன் வெடிப்பொருள் நிரப்பப்பட்ட பைகளை 96 சதவீத யானைகள் மிகச் சரியாக கண்டுபிடித்தது.
இந்த பரிசோதனைகளுக்கு அமெரிக்க ராணுவம் பெரிய அளவில் நிதியுதவி செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ அதிகாரி கூறும்போது, யானைகளை போர் நடைபெறும் இடங்களில் பயன்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் அது பயன்படுத்தும் வழிமுறைகளை கண்டறிந்து அவற்றை நவீன சென்சார் தொழிற்நுட்பத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications