இனி இந்தியர்களுக்கு வேலை இல்லை? H-1B விசா திட்டத்திற்கு முழு தடை? எலான் மஸ்க் சொன்ன முக்கிய கருத்து
வாஷிங்டன்: ஹெச்-1பி விசா குறித்து அமெரிக்காவில் இப்போது பெரும் விவாதமே நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் ஹெச்-1பி விசாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் தொழிலதிபர்கள் இதுபோன்ற தடைகளை எதிர்க்கிறார்கள். இதற்கிடையே ஹெச்-1பி விசா விவாதம் தொடர்பாக எலான் மஸ்க் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா திட்டத்திற்கு வலதுசாரிகள் மத்தியில் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லும் அவர்கள், ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஹெச்-1பி விசா
அதேநேரம் அங்குள்ள தொழிலதிபர்கள் ஹெச்-1பி விசா திட்டத்தை ஆதரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஒரு காலத்தில் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்கும் கூட ஹெச்-1பி விசாக்கள் தேவை என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல டிரேடிங் நிறுவனமான ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் உடன் நடந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அதேநேரம் இதற்கு முன்பு H-1B விசா திட்டத்தில் சிலர் முறைகேடு செய்ததாகவும் அதன் காரணமாகவே பாலிசிக்கள் கடுமையாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எலான் மஸ்க்
அமெரிக்கர்களின் வேலைகளை வெளிநாட்டவர்கள் பறிப்பதாகச் சில வலதுசாரிகள் கருதுகிறார்கள். இது குறித்துப் பேசிய அவர், "அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. திறமையானவர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை உள்ளது என்பதை என் நேரடி அனுபவத்தில் காண்கிறேன். சிக்கலான பணிகளைச் செய்யப் போதுமான திறமையான ஆட்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுகிறோம். எனவே திறமையான ஊழியர்கள் அதிகம் இருப்பது நல்லது தான்" என்றார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ என பல நவீன நிறுவனங்களை எலான் மஸ்க் நடத்தி வருகிறார். உலகெங்கும் உள்ள மிகவும் திறமையானவர்களைத் தனது நிறுவனங்களில் பணியமர்த்துவதில் கவனம் செலுத்துவதாக எலான் மஸ்க் கூறினார்.
தடை விதிக்கக்கூடாது
H-1B விசா திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை தான் என்ற அவர், அதற்காக ஹெச்-1பி விசா திட்டத்தையே முழுமையாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும், "H-1B திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளன. சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் H-1B விசா திட்டத்தில் குளறுபடிகள் செய்துள்ளன. இந்த முறைகேடுகளை நாம் சரி செய்ய வேண்டும். ஆனால் H1B திட்டத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை" என்றார்.
பல காலமாகவே H-1B விசா திட்டத்தின் மூலம் பல வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். குறிப்பாக இந்தியா மற்றும் சீன நாடுகள் இதில் அதிகம் பலன் பெறுகிறார்கள். இது அமெரிக்காவில் சென்று செட்டிலாகும் ஒரு வாய்ப்பையும் கூட வெளிநாட்டவருக்குத் தருகிறது.
டிரம்ப் நிர்வாகம்
இந்தச் சூழலில் தான் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தினார். முன்பு விசா கட்டணம் 5000 டாலராக இருந்த நிலையில், அதை $100,000 (சுமார் ₹89,47,000) டாலராக உயர்த்தினார். இதன் மூலம் H-1B விசா தடுக்க முடியும் என அவர் கூறினார். அதேநேரம் இந்தியர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
ஹெச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டதால் அடுத்து எங்கு டிரம்ப் அத்திட்டத்திற்குத் தடை விதிப்பாரோ எனப் பலரும் அஞ்சினர். இருப்பினும், டிரம்ப் ஹெச்-1பி விசாவுக்கு தடை விதிக்கும் திட்டத்தில் இல்லை. திறமையான வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு வரவேற்பதாகவும், அவர்கள் சிப் மற்றும் ஏவுகணைகள் போன்ற சிக்கலான விஷயங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications