பேரழிவு நிச்சயம்.. "அடுத்த 5 ஆண்டுகளில் மாபெரும் உலக போர் வெடிக்கும்.." எலான் மஸ்க் எச்சரிக்கை
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உலகப் போர் தொடர்பாக மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது உலகில் சீக்கிரமே ஒரு மாபெரும் போர் வெடிக்கும் என்று என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். அதுவும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் போர் வெடிக்கலாம் என அவர் சொல்லியிருக்கிறார். அவரது இந்த வார்னிங் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் என பல நிறுவனங்களைச் சொல்லலாம். அதேநேரம் அவர் தனது மனதுக்கு பட்டத்தையும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அப்படித் தான் அதிபர் தேர்தல் சமயத்திலும் கூட அவர் வெளிப்படையாகவே டிரம்ப்பை ஆதரித்திருந்தார்.

எலான் மஸ்க்
மேலும், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், அதிலும் ஓபனாக தனது கருத்துகளைச் சொல்லிவிடுவார். பல நேரங்களில் அதுவே ஒரு விவாதமாக மாறிவிடும். அப்படி அவர் போட்ட பதிவு தான் இப்போது ட்விட்டரில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. அதாவது உலகில் ஒரு பயங்கரமான மோதல் ஏற்படும் என சொல்லி இருக்கிறார். அது ஒரு அணு ஆயுதப் போராக மாறவும் கூட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்கள்
சர்வதேச சமூகம் அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடந்தது. அதில் ஹண்டர் ஆஷ் என்ற யூசர், "அணு ஆயுதங்கள் உலகின் முக்கிய வல்லரசுகளுக்கு இடையேயான போரைத் தடுத்து விடுகிறது. உலகின் மேஜர் நாடுகளுக்கு இடையேயான போர் அபாயத்தை கூட தடுத்துவிடுகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் செயல்திறன் கடுமையாகக் குறைந்துவிட்டன. அதாவது உலக நாடுகள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து, திறம்படச் செயல்படுவதற்கு எந்தவொரு அழுத்தங்களும் இல்லாமல் போய்விட்டன" எனப் பதிவிட்டிருந்தார். அதாவது போர் பயம் இல்லாததால் உலக நாடுகள் முறையாக செயல்படுவதில்லை என பதிவிட்டிருந்தார்.
உலகப் போர் வெடிக்கும்
அவரது இந்த போஸ்ட்டிற்கு பதிலளித்த எலான் மஸ்க், "போர் தவிர்க்க முடியாதது. அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 2030க்குள்) ஒரு மாபெரும் போர் வெடிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எலான் மஸ்கின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதமாக மாறியது. அவர் எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இதனால் பலரும் குழப்பமடைந்தனர்.
அவரை எதைச் சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது க்ரோக் செயலியிடமே சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இதற்கு க்ரோக் அளித்த பதிலில், "எலான் மஸ்க் எந்தவொரு மோதல் அல்லது காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.. ஆனாலும், அவரது கடந்தகாலக் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது அவர் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டினர் குடியேற்றத்தால் ஏற்படும் உள்நாட்டு போர், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்கள், உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போராக மாறுவது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளது.
3 விஷயங்கள்
அவர் மூன்று விஷயங்கள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். அதில் உக்ரைன் விவகாரம் அனைவருக்கும் தெரியும். ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை வெளிநாட்டினர் அதிகளவில் அங்குக் குடியேறுவதால் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற கோபத்தில் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள். அது உள்நாட்டு போராக வெடிக்கலாம்.
அடுத்து தைவான் விவகாரம்.. தைவான் தங்களுக்குத் தான் சொந்தம் எனச் சீனா சொல்லி வருகிறது. ஆனால், தைவான் அதை ஏற்கவில்லை. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால் சீனா- அமெரிக்கா மோதல் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications