சவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..!
ரியாத்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்நாட்டு முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர்.
Recommended Video
அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமான சி.பி.எஸ்.க்கு 60 நிமிடங்கள் அவர் அளித்துள்ள பேட்டியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் துணிச்சலாக பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை பதவிக்காக இளவரசர் சல்மான் கொலை செய்ய விரும்பியதாகவும், இதற்காக விஷேச முறையில் உருவாக்கப்பட்ட விஷம் நிறைந்த மோதிரத்தை அவர் ரஷ்யாவிலிருந்து வாங்கினார் எனவும் திடுகிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

புலனாய்வு அதிகாரி
சவுதி அரேபியாவில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியாற்றிய சையது அல் ஜாப்ரி தற்போது உயிருக்கு அஞ்சி கனடாவில் வசித்து வருகிறார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சதிதிட்டங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்பதால் தன்னை தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்திருப்பதாகவும் தனது மரணச் செய்தியை கேட்கும் வரை அவர் அமைதியாக மாட்டார் எனவும் கூறியுள்ளார் அல்ஜாப்ரி.

விஷ மோதிரம்
மேலும், பதவிக்காக சவுதி மன்னர் அப்துல்லாவை விஷம் நிறைந்த மோதிரத்தால் கை குலுக்கி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும் இந்த தகவல் தனக்கு தெரிந்துவிட்டதால் தன்னை கொலை செய்ய சல்மான் துடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பத்திரிகையாளர் கஷோகி கொலையில் இளவரசர் சல்மான் பெயர் தொடர்புப்படுத்தப்படும் நிலையில், சவுதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி கூறியிருக்கும் இந்த தகவல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சவுதி மன்னர்
கடந்த 2015-ம் ஆண்டு மன்னர் அப்துல்லா காலமானதை அடுத்து சல்மான் பின் அப்துல் அஜீஸ் சவுதி மன்னராக இருந்து வருகிறார். இவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தையாவார். சல்மான் மீது குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி அல் ஜாப்ரி, முன்னாள் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃபுக்கு வலது கரமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய் குற்றச்சாட்டு
இதனிடையே அல் ஜாப்ரியின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தரப்பு, நிதி விவகாரத்தில் அவர் தவறுகளில் ஈடுபட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இது போன்ற புகார்களை அவர் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக நாடுகள் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications