Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸ் ஸ்பை.. பலமுறை கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்.. தாலிபானையே கலங்கடிக்கும் கேர் டேக்கர் அதிபர்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லா சாலே சவால்விட்டு வருகிறார். தாலிபான்களின் கொலை முயற்சியில் இருந்து பலமுறை "எஸ்கேப்" ஆனவர்.. தற்போது தாலிபான்களுக்கு எதிராக அதிரடியாக முழக்கமிட்டு உள்ளார். இவருக்கு பின் பெரிய கொரில்லா படையின் ஆதரவு இருப்பதால் தாலிபான்களும் இவரை பார்த்து கொஞ்சம் கலக்கம் அடைந்து வருகின்றன...

"என்ன நடந்தாலும் நான் இந்த நாட்டை விட்டு ஓடமாட்டேன். என்னை நம்பி இருக்கும் பல லட்சம் மக்களை நான் ஏமாற்ற மாட்டேன். இந்த தாலிபான்களுக்கு கீழ் நான் என்றும் அடிபணிய மாட்டேன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்.. வாய்ப்பே இல்லை"... ஆப்கான் மொத்தமும் தாலிபான் வெற்றியால் பதறிக்கொண்டு இருந்த அந்த நொடி ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் அம்ருல்லா சாலே சொன்ன வார்த்தைகள் இவை. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி ஓடிவிட்டார்.. மக்கள் வெளியேறிவிட்டனர்.. அமெரிக்கா மௌனம் ஆகிவிட்டது.

ஆப்கான் அரசுக்கு யாரும் வெளிப்படையாக ஆதரவு தரவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்.. என்ன நடந்தால் என்ன.. என்னிடம் உயிர் இருக்கிறது என்று தாலிபான்களுக்கு எதிராக நெஞ்சை நிமிர்த்தி நின்று இருக்கிறார் ஆப்கானிஸ்தானின் துணை அதிபர் சாலே. தற்போது பஞ்ச்சீர் மலை பகுதியில் தலைமறைவாக வேறு சில கொரில்லா போராளி குழுக்களோடு தங்கி இருக்கும் சாலே தாலிபான் படைகளுக்கு எதிராக புதிய தலைவலியாக உருவெடுத்து உள்ளார்.

பேட்டி

பேட்டி

ஆப்கானை பிடித்துவிட்டோம்.. இனி எங்களை வெல்ல யாருமில்லை என்ற கொக்கரிப்போடு உற்சாக மிகுதியில் தீம் பார்க்குகளில் விளையாடிக்கொண்டு இருந்த தாலிபான்களுக்கு இவர் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். ஆப்கான் நாட்டு சட்ட விதிகளின்படி நம் நாட்டின் அதிபர் இறந்துவிட்டாலோ, தலைமறைவு ஆனாலோ, பதவி விலகினாலோ, வெளிநாடு தப்பி ஓடினாலோ துணை அதிபராக இருப்பவர்தான் காபந்து அதிபராக தேர்வு செய்யப்படுவார். அவருக்கே அதிபருக்கான அனைத்து சக்திகளும் இருக்கும். நான்தான் இந்த நாட்டின் காபந்து அதிபர்.. என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இந்த நாடு இருக்கிறது என்று சாலே தாலிபான்களுக்கு சவால் விட்டு இருக்கிறார்.

யார் இவர்?

யார் இவர்?

தாலிபானுக்கு எதிராக அமெரிக்க அதிபர் பிடனே அமைதியான நிலையில்.. தைரியமாக சவால் விடும் இந்த துணை அதிபர் சாலே யார் என்று பார்க்கலாம். தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பஞ்ச்சீர் மலை பகுதியில் இவர் வசித்து வருகிறார். காபூலின் உச்சியில் மலைமுகடுகளுக்கு பின்னே இந்த பஞ்ச்சீர் மலை பகுதி அமைந்துள்ளது. சாலே, அவரின் நெருங்கிய சகாக்கள், தாலிபான் அமைப்பிற்கு எதிரான கொரில்லா இயக்கத்தை நடத்தி வரும் அகமது மசூத் ஆகியோருடன் இந்த மலை முகடுகளுக்கு பின் பதுங்கி இருக்கிறார். தாலிபான்களுக்கு எதிராக அடுத்தகட்ட திட்டங்களை இவர் தீட்டி வருகிறார். சாலே குறித்து பார்க்கும் முன் அவருடன் இருக்கும் அகமது மசூத் குறித்து ஒரு சின்ன இன்ட்ரோ.. இவர் ஆப்கானிஸ்தானின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட அகமது ஷா மசூத்தின் மகன் ஆவார். அகமது ஷா மசூத் தொடக்க காலத்தில் முஜாகிதீன் அமைப்புக்களுடன் இணைந்து சோவியத் ஆதிக்கத்தை ஆப்கானிஸ்தானில் எதிர்த்தவர். தாலிபான் அமைப்பும் இந்த முகாஜித்தினில் ஒன்றாக இருந்தது.

தாலிபான்

தாலிபான்

சோவியத் படைகள் சென்ற பின் தாலிபான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தாலிபான்களின் மூர்க்கத்தனமான ஆட்சியை அகமது ஷா மசூத் எதிர்த்து வந்தார். தாலிபான்களுக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை திரட்டி போராடி வந்தார். தாலிபான்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் 2001 செப்டம்பர் 11ம் தேதி சரியான டவின் டவர் அட்டாக்கிற்கு இரண்டு நாட்களுக்கு பின்பு தாலிபான் மூலம் கொல்லப்பட்டார். இவர் உருவாக்கிய கொரில்லா படைகள் இப்போதும் ஆப்கானிஸ்தானில் உள்ளது. இந்த கொரில்லா படைகளில் பயிற்சி எடுத்து, அகமது ஷா மசூத்தின் மேற்பார்வையில் வளர்ந்தவர்தான் தற்போதைய ஆப்கான் துணை அதிபர் சாலே. எப்படி ஹிஸ்டரி!

சாலே யார்?

சாலே யார்?

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த சாலே தாலிபான்களுக்கு எதிராக தொடக்க காலத்தில் இருந்தே போராடி வருகிறார். மசூத்தின் கொரில்லா படையில் பயிற்சி பெற்று, 1996ல் தாலிபான் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்களை எதிர்த்து இவர் போராடி வருகிறார். இவரை பிடிக்க தாலிபான்கள் பலமுறை முயன்று தோல்வி அடைந்தது. இவரின் தங்கை உள்ளிட்ட பலரை பிடித்து தாலிபான் கொடுமைப்படுத்தியது. இதனால் கவனம் பெற்ற சாலே தாலிபான்களுக்கு எதிராக சிஐஏ மூலம் வளர்த்துவிடப்பட்டார்.

பயிற்சி

பயிற்சி

அரசியல் தொடங்கி போர் வரை அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து சிஐஏ சாலேவை உளவாளியாக மாற்றியது. இதன் மூலம் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கான் உளவு நிறுவனத்தின் தலைவராக உயரும் நிலைக்கும் சென்றார். இந்தியாவின் ரா உளவு நிறுவனத்தோடு நட்பு, பாகிஸ்தானில் பல உளவாளிகளுடன் தொடர்பு, அமெரிக்காவிற்கு நெருக்கம் என்று சாலேவை பார்த்து சில நாட்களிலேயே பலர் சலாம் போட தொடங்கினார்கள். தாலிபான்களை வளர்த்துவிடுவதே பாகிஸ்தான்தான் என்று பல வருடங்களுக்கு முன்பே ஆதாரங்களோடு புட்டு புட்டு வைத்தவர் சாலே

ஒசாமா

ஒசாமா

ஒசாமாவை அமெரிக்கா தீவிரமாக தேடி வந்த காலத்திலேயே அவர் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்று சாலே அடித்து சொன்னார். இதை அப்போது சாலே நிரூபிக்க முடியவில்லை என்றாலும் பிற்காலத்தில் இது உண்மையானது வேறு கதை. ஒசாமா இருப்பிடம் தொடங்கி, தாலிபானின் சீக்ரெட் பாகிஸ்தான் நட்பு வரை அனைத்தையும் வெளியே கொண்டு வரும் அளவிற்கு சாலேவின் உளவு நெட்வொர்க் இருந்தது. இவரின் வளர்ச்சி காரணமாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூட சாலேவை இந்திய உளவு நிறுவனமான ராவின் அடியாள் என்று விமர்சனம் செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக துணிச்சலாக பேசி வந்தவர் சாலே. இதனால் ரஷ்யாவையும் பகைக்க இவர் அஞ்சவில்லை.

கொலை முயற்சி

கொலை முயற்சி

இதன் காரணமாகவே அமெரிக்க ஆதரவிற்கு இடையிலும் இவருக்கு எதிராக நிறைய கொலை முயற்சிகள் நடந்தன. 2010ல் காபூலில் நடந்த தாலிபான் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உளவுப்படை இயக்குனர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவர் 2018ல் அஷ்ரப் கானியுடன் உடன்படிக்கை மேற்கொண்டு, அவரின் அரசுக்கு ஆதரவு அளித்து நாட்டின் துணை அதிபர் பதவி வரை உயர்ந்தார். அதிபராக அஷ்ரப் கானி இருந்தாலும் இவர்தான் நாட்டை கவனித்து வந்தார்.

Recommended Video

    Taliban-களுக்கு மத்தியில் நடைபெற்ற Operation.. India அதிகாரிகள் மீட்கப்பட்டது எப்படி?
    ஆட்சி

    ஆட்சி

    இவரிடம் மொத்தமாக ஆட்சி இருந்திருந்தால் தாலிபான்கள் இவ்வளவு எளிமையாக வெற்றி பெற்று இருக்க முடியாது. கடந்த 20 வருடங்களில் தாலிபான் இவரை பலமுறை தீர்த்துக்கட்ட முயன்று இருக்கிறது. கடந்த வருடம் செப்டம்பரில் கூட இவரின் கான்வாய் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இவர் உயிர் தப்பினார். ஒவ்வொரு முறையும் தாலிபான்களிடம் டிமிக்கி கொடுத்தவர் இப்போதும் தனது தாய் வீடான கொரில்லா போராளி குழுவுடன் சென்று இணைந்துவிட்டார்.

    தாக்குதல்

    தாக்குதல்

    தாலிபான்களுக்கு எதிராக கொரில்லா போராட்ட குழுக்களோடு மீண்டும் சேர்ந்து சாலே சவால் விட்டு வருகிறார். தாலிபான் படைகளை அழிப்பேன் என்று உறுதி ஏற்று இருக்கிறார். ரஷ்யாவில் ஒரு காலத்தில் புடின் இதேபோல்தான் உளவாளியாக இருந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து அதிபர் ஆனார். அதேபோல் தற்போது தாலிபான் படைகளுக்கு எதிராக முன்னாள் உளவாளி, தாலிபான்களை கரைத்து குடித்த சாலே நெஞ்சை நிமிர்த்தி நிற்க தொடங்கி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+