பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கி, செல்போன்! லெபனான், சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்
பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேஜர்களை தொடர்ந்து, தற்போது வாக்கி டாக்கி, செல்போன், லேப்டாப் வெடிக்க தொடங்கியுள்ளன. இதில் 3 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் எனப்படும் ஒரு இனக்குழுக்கள்தான் இஸ்ரேலை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தை உடைத்துதான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதற்கு பின்னால் அமெரிக்காவும், பிரிட்டனும் இருந்தது தனிக்கதை. இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதுதான் போரின் தொடக்கப்புள்ளி.

அவ்வப்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை குழுக்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. இப்படி இருக்கையில், முதன் முறையாக இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தாக்குதலை நடத்தியது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவர்களின் சடலங்கள் கிடைக்காததால், இந்த இறப்புகளை உறுதி செய்ய முடியவில்லை.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவித்த இஸ்ரேல் தீவிர போரை அறிவித்தது. இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் அம்மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக லெபனான் மீது இஸ்ரேலால் போரை தொடுக்க முடியாது. அப்படி செய்தால் ரஷ்யா இந்த போரில் தலையிட தொடங்கிவிடும். அப்படி மட்டும் நடந்தால், இஸ்ரேலின் கதை மொத்தமாக முடிந்துவிடும். எனவே, என்ன செய்யவது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கையில், தற்போது லேப்டாப், வாக்கி டாக்கி, செல்போன்கள், சூரிய மின்சக்தி கலன்கள் உள்ளிட்டவையும் வெடிக்க தொடங்கியுள்ளன. லெபனான் மட்டுமல்லாது சிரியாவிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து மின்னணு சாதனங்களையும் அனைத்து வைக்குமாறு லெபனான் அரசு மக்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications