For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிதீவிர வலதுசாரி.. நெதன்யாகுவின் "காட் - பாதர்".. இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட் யார்?

Google Oneindia Tamil News

டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் நஃப்டாலி பென்னட் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்று இருக்கும் நஃப்டாலி பென்னட் அதி தீவிரமான வலதுசாரி அரசியல் கொள்கையை கொண்டவர்.

இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 4 தேர்தல்களில் எதிலும் பெஞ்சமின் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் மைனாரிட்டி அரசாக காபந்து ஆட்சி நடத்தி வந்தார் பெஞ்சமின் நெதன்யாகு.

இதையடுத்து நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் திரண்டு வந்து இருக்கின்றன. வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன.

திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம்திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம்

ஆட்சி

ஆட்சி

12 வருடமாக இஸ்ரேலின் பிரதமராக நீடித்து வந்த வலதுசாரி தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், நஃப்டாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்றியது.

கைப்பற்றியது

கைப்பற்றியது

இஸ்ரேலில் கடந்த 2 வருடமாக 4 தேர்தல்கள் இரண்டு வருடத்தில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அங்கு எந்த கட்சியும், கூட்டணியும் பெரும்பான்மை பெற்று முழுமையான ஆட்சி அமைக்க முடியவில்லை. நான்கு முறையும் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. இஸ்ரேலில் ஆட்சி அமைக்க 120 இடங்களில் 61ல் வெல்ல வேண்டும்.

கூட்டணி

கூட்டணி

கடைசி தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 31 இடங்களில் மட்டுமே வென்றது. அவரின் கூட்டணி 54 இடங்களில் வென்றது. இதனால் அவரால் தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தீவிர இடதுசாரி கட்சியான யாமினாவின் தலைவர் பென்னட் , பிரதான கட்சியாக யாஷ் அடிட் கட்சியின் லாபிட் இருவரும் இணைந்து எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டணி அமைத்தனர்.

கூட்டணி

கூட்டணி

இதனால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு 66 இடங்கள் கிடைத்தன. இந்த கூட்டணியில் வலதுசாரி கட்சி, தீவிர வலதுசாரி கட்சி, மய்ய கட்சி, அரபு ஆதரவு கொண்ட கட்சி என்று எல்லா விதமான கட்சிகளும் உள்ளன. அங்கு பிரதான எதிர்க்கட்சியான யாஷ் அடிட் கட்சிதான் இந்த கூட்டணி உருவாக காரணம். இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பென்னட் 2 வருடமும், லாபிட் கடைசி 2 வருடமும் பிரதமராக இருப்பார்கள்.

பதவி ஏற்பு

பதவி ஏற்பு

இதையடுத்து நேற்று பென்னட் இஸ்ரேலின் பிரதமராக பதவி ஏற்றார். இரண்டு வருடம் கழித்து பிரதமராக போகும் லாபிட் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட் தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் யாமினா கட்சி, தீவிர பாலஸ்தீன எதிர்ப்பும், அதி தீவிர யூத கொள்கையும் கொண்ட அமைப்பு ஆகும்.

Recommended Video

    Who is Neftali Bennet? | Israel-ன் அடுத்த பிரதமர்.. Netanyahu-வை விட தீவிரமானவர்
    மாறாது

    மாறாது

    குறிப்பாக பாலஸ்தீனத்தில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என்று திட்டத்தை கொண்டு வந்தது, அதை அரசியல் கொள்கையாக மாற்றியது, அதை வாக்கு வங்கியாக மாற்றியது நஃப்டாலி பென்னட்தான். இதனால் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் அணுகுமுறை மாற வாய்ப்பு குறைவு. 49 வயதான நஃப்டாலி பென்னட் பல கோடி சொத்துக்களை கொண்ட முன்னாள் அமைச்சர் ஆவார். அமெரிக்காவில் பிறந்த யூதர்.

    காட் பாதர்

    காட் பாதர்

    இவர் ஒருவகையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் காட் பாதர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் பாலஸ்தீன எதிர்ப்பை போர் என்ற நிலையில் இருந்து அதை அரசியல் கொள்கையாக மாற்றியது, அதை வாக்கு வங்கியாக மாற்றியது நஃப்டாலி பென்னட்தான்.வெஸ்ட் பேங்கை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து கொடுத்தது நஃப்டாலி பென்னட்தான். அதைதான் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியாக கொடுத்த தலைவர் ஆனார்.

    காரணம்

    காரணம்

    பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அரசியல் திட்டங்களை போட்டுக்கொடுத்தது இவர்தான் நஃப்டாலி பென்னட் உருவாக்கிய தீவிர வலதுசாரி வாக்கு வங்கியை பெஞ்சமின் நெதன்யாகு பெரிய தலைவராக உருவெடுக்க காரணமாக இருந்தது. நெதன்யாகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருக்கு 2006-2008ல் ஆலோசகராக நஃப்டாலி பென்னட் இருந்தார். தற்போது அதே காட் பாதர் இஸ்ரேலின் பெஞ்சமினை அப்புறப்படுத்திவிட்டு பிரதமர் ஆகியுள்ளார்.

    English summary
    Extreme right leader: The unknown side of Israel's new prime minister Naftali Bennett who ousted 12 years long PM Benjamin.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X