"பலாத்காரம், மார்பகங்களை அறுத்து படுகொலை.." சிறுமிகளை கூட விட்டுவைக்கல.. ஹமாஸ் வெறிச்செயல்! பகீர்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் ஹமாஸ் நடத்திய கொடூரங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கே போர் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பதிலடி தர ஆரம்பித்தது.

இந்தப் போர் சுமார் 3 மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்த முயற்சிக்குப் பெரியளவில் பலன் இல்லை. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் கூறிவிட்டது.
பாலியல் வன்கொடுமை: இதற்கிடையே அதன்பிறகு அங்கு நடந்த பெண்களுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பிரபல அமெரிக்கச் செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் இது குறித்து இரண்டு மாத விசாரணையை நடத்தி, அங்கு நடந்த பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட மோசமான தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான கேல் அப்துஷ் என்பவரின் வீடியோ இணையத்தில் டிரெண்டானது. துப்பாக்கிச் சூடு நடந்த ரேவில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டானது. அதில் கால் அப்துஷ் என்ற அந்த பெண்ணின் உடை மிக மோசமான நிலையில் இருந்தது. மேலும், அடையாளம் தெரியாத அளவுக்கு அவரது முகம் எரிந்து கிடந்துள்ளது.
மிக மோசமான சம்பவம்: கல் அப்துஷ் என்ற அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் போலீசார் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் அங்கே ஹமாஸ் பயங்கரவாதிகளால் என்ன மாதிரியான கொடூரம் நடத்தப்பட்டது என்பதற்கான சாட்சியாக இருக்கிறது. இது இங்கு மட்டும் நடந்தது இல்லை. மொத்தம் 7 இடங்களில் பெண்களும் சிறுமிகளும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ரேவ், காசா எல்லையில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் கிபுட்சிம் ஆகிய இடங்களில் பல இடங்களில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். கால் அப்துஷைப் என்ற ஒரு இடத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் பிறப்புறுப்புப் பகுதிகளில் மிக மோசமான காயமும் இருந்துள்ளது. அந்தளவுக்கு மிக மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன.
படுகொலை: மேலும், மிக மோசமான நிலையில் இருக்கும் பல சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. பல பெண்களின் தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் ஆணிகள் அடிக்கப்பட்டு இருந்தது. இஸ்ரேல் வீரர்களிலும் சிலர் பிறப்புறுப்புப் பகுதிகளில் நேரடியாகச் சுட்டுக் கொல்லப்பட்ட ஷாக் சம்பவமும் நடந்துள்ளது இவை எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி பெண்களின் மார்பகங்களையும் உடல்களை வெட்டியும் கொலை செய்துள்ளனர். பெண்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மார்பகங்கள் வெட்டப்பட்டதாக இந்த கொடூரத்தை நேரில் பார்த்த பல பெண்களும் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை ஹமாஸ் மறுத்துள்ளது, இது இஸ்ரேல் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஹமாஸ் அட்டூழியம் குறித்து ஐநாவும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றும் இஸ்ரேல் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications