'ஆண்-பெண் இடையே ஊதிய பாகுபாடு வேண்டாமே' : ஃபேஸ்புக் மூத்த அதிகாரி
பெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க பணி இடங்களில் வலிமையான கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில், ''இதற்கு முதல்படி பெண்களுக்கு நல்ல ஊதியம் வழங்குவதுதான்'' என்று தெரிவித்தார்.
"நாம் சிறு வயது பெண்களிடம், இளம் வயதில் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் ஆண்களை இளம் வயதில் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறுவதே தவறு." என்கிறார் அவர்.
"தலைமை பொறுப்பை ஏற்பதற்கு ஒவ்வொருக்கும் திறமை இருப்பதாக நான் நம்புகிறேன். அவர்கள் யார் என்பதை பொறுத்தும் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்பதை பொருத்தும் அதை அவர்கள் தீர்மானிப்பார்கள்; பாலினத்தை வைத்து நாம் தீர்மானிக்க கூடாது.
உணர்ச்சிகரமாக அந்த நேர்காணலில், 2015-ஆம் ஆண்டில் தனது கணவர் திடீரென மரணம் அடைந்தது குறித்தும், அதனால் தனது இரண்டு பிள்ளைகளிடம் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் தெரிவித்தார்.
"எவராலும் இந்தளவு அழ முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை" என அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்:
ஃபேஸ்புக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நான்கு விடயங்கள்
புதிய சாதனையை எட்டிய ஃபேஸ்புக் நிறுவனம்; மார்க் சக்கர்பெர்க் பெருமிதம்
2013ம் ஆண்டு பணிபுரியும் இடங்களில் பெண்கள் முன்னேற்றம் குறித்து அவர் எழுதிய "லீ ன்" புத்தகத்தால் அவர் பெரும் புகழ்பெற்றார்.
அந்த புத்தகம் உலகளவில் நன்றாக விற்பனையானது ஆனால் உயர்பதவியிலிருக்கும் பெண்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனவும் அவரை போன்ற உயர் பதவியில் இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு அது இயல்பிற்கு மாறாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
கொள்கை தேவை
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே இருக்கும் ஊதிய வித்தியாசத்தை சரி செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்வேடில் தன்னை குறித்து தனக்கு சந்தேகம் எழுந்ததாகவும், மேலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் அதிகமான அளவில், முன்னேறி செல்லமுடியாமல் அல்லது ஊதிய உயர்வு கோர முடியாத அளவு தங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
"பெண்களுக்கு நல்லமுறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்றும் பொது மற்றும் காப்ரேட் கொள்கைகள் அவ்வாறு அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்."
"ஆண்களின் எண்ணிக்கைக்கு ஈடாக பெண்களும் பணிக்கு விண்ணபிக்கின்றனர், ஆண்கள் வேலை செய்யும் அதே நேரம் பெண்களும் வேலை செய்கின்றனர் அதுவே இதற்கு பதிலாக அமைந்துள்ளது."
நான் வருத்தமாக இருந்தேன்
தனது கணவர் டேவ் கோல்ட்பர்க் திடீரென மரணமடைந்ததையடுத்து தான் மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
வார இறுதியில் வெளியில் சென்றிருந்த போது தீடிரெனெ உடற்பயிற்சி கூடத்தில் மாரடைப்பு வந்து, தலையில் காயங்களுடன் அவர் தரையில் கிடப்பதை சாண்ட்பர்க் பார்த்தார்.
சில சமயங்களில் கண்ணில் நீருடன் பேசிய அவர், "நான் வருத்தமாக இருந்தேன். யாரேனும் இந்தளவு அழ முடியுமா என எனக்கு தெரியவில்லை. எனது சகோதரி மருத்துவரை அவரிடம் இதைப் பற்றி கேட்ட போது உனது உடல் பெரும்பாலும் நீராலானது என கிண்டல் செய்தார்" என்கிறார் சாண்ட்பர்க்.
அவரின் கணவர் இணைய இசைதலமான லான்ச் மீடியாவின் நிறுவனர் ஆவார்.
'பணிதான் எனக்கு ஒரு ஆறுதல்'
தனது கணவரின் இறப்பிற்கு பிறகு பிறரை பற்றி தான் அதிகமாக புரிந்துக் கொண்டதாக தெரிவித்த சாண்ட்பர்க், ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் மரணமடைந்தால் அதிகப்படியாக 20 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என மாற்றியுள்ளார் சாண்ட்பர்க்.
"அதே சமயத்தில் அவர்கள் பணிக்கு வர விரும்பினால் அவர்களுக்கு நாம் ஆதரவளித்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்."
"நான் அவர்களுக்கு விடுப்பு அளிக்கிறேன், ஆனால் அவர்கள் பணிபுரிய விழைந்தால் அதை செய்யலாம்."
"டேவின் நினைவு எங்கும் உள்ளது; ஆனால் நான் வீட்டில் இருக்கும்போது அது அதிகமாக இருக்கும்; எனவே வீட்டை விட்டு வெளியே வந்து வேறு பணியில் ஈடுபவது எனக்கு பெரிய ஆறுதல் அளிக்கும்."
இதை தங்கள் துணை அல்லது குழந்தைகளை இழந்த பலர் கூற நான் கேள்விப்பட்டுள்ளேன் என சாண்ட்பர்க் தெரிவித்தார்.
சிக்கலான உரையாடல்கள்
பயங்கரவாதத்தை தடுக்க ஃபேஸ்புக் எடுக்கு நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலர் ஆம்பர் ரட்டுடனான சந்திப்பு குறித்து கேட்ட போது, நிறுவன கொள்கையில் அதுவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக சாண்ட்பர்க் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்சப் அப் செய்திகள் குறித்தும் சிக்கலான பேச்சு வார்த்தைகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் 22ம் தேதி லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களின் வாட்சப் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் போலிஸார் கேட்டிருந்தனர்.
பிற செய்திகள் :
- பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்
- பெண்ணின் கழுத்தை சுற்றி, மூக்கை கடித்த மலைப்பாம்பு: மீண்டது எப்படி?
- 'சாக்லெட் தந்த சித்தப்பா, என்னை மாமா என்று கூப்பிட சொன்னால்....'
- சீனா குறித்து ஏமாற்றம் அடைந்துள்ள டிரம்ப்
- ஆக்சிஜன் இல்லாமல் நீருக்கடியில் இரண்டு நாட்கள்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக














Click it and Unblock the Notifications