கூகுளுக்கு போட்டியாக கோதாவில் குதித்த பேஸ்புக்! செய்திகளை போஸ்ட் செய்யப்போகிறதாம்!
வாஷிங்டன்: பேஸ்புக்கிலேயே செய்திகளை வாசிக்கும் அனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பதற்காக, முன்னணி மீடியா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.
இணையதளம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், பேஸ்புக்கே கதியாக இருப்பவர்கள். எனவே, பல்வேறு மீடியா நிறுவனங்களும், அதிலும் குறிப்பாக ஆன்லைன் மீடியா நிறுவனங்கள், பேஸ்புக் பக்கங்களை வைத்துள்ளன. அதில் செய்தியை வெளியிட்டு, முழு செய்தியை படிக்க அதன் 'லிங்கை' இணைத்துவிடுகின்றன.

செய்தி பிடித்திருந்தால், லிங்க் மூலமாக, தங்களது ஆன்லைன் பக்கத்திற்கு வாசகர்கள் வருவார்கள் என்பது மீடியாக்களின் நோக்கம். ஆனால் இதில் ஒரு சிறு பிரச்சினை என்னவென்றால், லிங்கை கிளிக் செய்து உள்ளே செல்ல சுமார் 8 வினாடிகளாவது நேரம் பிடிக்கிறது. அந்த அளவுக்கும் பொறுமையில்லாத வாசகர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவிட்டது. அதிலும், செல்போனில் பேஸ்புக் பார்ப்போர், இந்த கால விரையத்தை சகித்துக்கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்.
இதை கருதித்தில் கொண்டு, செய்தி இணையதளத்தில் இடம்பெறும் முக்கிய செய்திகளை, போஸ்ட் வடிவில் பேஸ்புக் பிரசுரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, லிங்கை கிளிக் செய்யாமல், பேஸ்புக் செய்தி போஸ்டிலேயே பிரபல இணையதளங்களின் செய்திகளை பார்த்துக்கொள்ள முடியும்.
மேலைநாட்டு ஆங்கில ஊடகங்களில் இருந்து இந்த திட்டத்தை ஆரம்பிக்க உள்ளது பேஸ்புக். இதற்காக, நியூயார்க் டைம்ஸ், நேஷனல் ஜியாகிரபிக், பஸ்ஃபீட், ஹஃபிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட ஆறு ஊடகங்களிடம் பேஸ்புக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதனால் ஆன்லைன் ஊடகங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. பேஸ்புக்தான் முழு நன்மையையும் பெறப்போகிறது என்பதால், இதுவரை எந்த ஊடகமும் பேஸ்புக் யோசனைக்கு செவி சாய்க்கவில்லை. எனவே அடுத்தகட்ட பேச்சுவாரத்தை நடந்து வருகிறது.
பேஸ்புக்கிற்கு 1.6 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்கு சென்று நடப்பு செய்திகளை பார்க்கும் வாசகர்களுக்கும், இனிமேல் பேஸ்புக்கிலேயே அந்த வசதி கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளதால், கூகுளுக்கு இது பின்னடைவாக இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications