"மிஸ்ஸிங்" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம்
48 ஆண்டுகள் போராடி இறந்த மகனின் உடல் உறுப்புகளை பெற்றுள்ளார் ஸ்காட்லாந்து பெண்
எடின்பர்க்: இறந்த தன்னுடைய குழந்தையின் உடலை 48 ஆண்டுகள் கழித்து ஒரு தாய் பெற்றிருப்பது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. அந்த தாயின் சட்டப்போராட்டமும் பேசுபொருளாகி வருகிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவை சேர்ந்தவர் அந்த பெண்.. இப்போது 74 வயதாகிறது.. அவர் பெயர் லிடியா ரீட்.. இவருக்கு கடந்த 1975ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது..
அந்த குழந்தைக்கு "கேரி" என்று பெயர் வைத்தார்.. குழந்தை பிறந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.. அதற்குள் "ரீசஸ்" என்ற நோய் தாக்கி அக்குழந்தை இறந்துவிட்டது..

எங்கே குழந்தை
ரீசஸ் என்ற நோயானது, கர்ப்பிணியின் ரத்தத்தில் உள்ள ஆண்ட்டிபாடிகள், அவருடைய குழந்தையின் ரத்த அணுக்களை அழிக்கும் நோயாகும்.. ஆனால், குழந்தையை டாக்டர்கள் தூக்கி சென்றுவிட்ட நிலையில், அதுகுறித்து லிடியாவிடம் எந்த தகவலையும் பகிரவில்லை.. இதனிடையே லிடியா, தன்னுடைய குழந்தையின் உடலை பார்க்க வேண்டும் என்று மருத்துவமனையில் டாக்டர்களிடம் கேட்டுள்ளார்.. அப்போது டாக்டர்கள், இவரது குழந்தையை காட்டாமல், வேறொரு குழந்தையை கொண்டுவந்து, லிடியாவிடம் காட்டி உள்ளனர்.. அந்த குழந்தையை பார்த்ததுமே, தன்னுடையது இல்லை என்பதை லிடியா அறிந்து கொண்டார்.. அத்துடன் தன்னுடைய குழந்தை எங்கேயிருக்கிறது? என்ன ஆனது? என்றும் தேட துவங்கினார்..

உறுப்பு மிஸ்ஸிங்
அதாவது, லிடியாவுக்கு தெரியாமலேயே அவருடைய குழந்தையின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுள்ளது.. அப்போது, அந்த குழந்தையின் உடல் உறுப்புகளும் ஆராய்ச்சிக்காக வெட்டி எடுத்துள்ளனர்.. உடல்உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள உடல் புதைக்கப்பட்டு, மருத்துவமனை சார்பில் இறுதிச்சடங்கும் செய்யப்பட்டுள்ளது.. தன் குழந்தையை மருத்துவமனையே அடக்கம் செய்துவிட்டது பின்னாளில்தான் லிடியாவுக்கு தெரியவந்தது. இவ்வளவு தூரம் மருத்துவமனை நம்மை ஏமாற்றிவிட்டதே என்பதை அறிந்து ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்தார் லிடியா.. அதனால், சட்ட ரீதியாக இந்த விஷயத்தை கையாள முடிவு செய்தார்..

உடல் உறுப்புகள்
அதன்படி மொத்தம் 42 வருடங்கள் கோர்ட் கேஸ் என்று அலைந்து திரிந்தார்.. இந்த விடாமுயற்சி போராட்டத்தினால், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவரது மகன் புதைக்கப்பட்ட சவப்பெட்டியை தோண்டி எடுக்க கோர்ட் உத்தரவு தந்தது.. இதையடுத்து, சவப்பெட்டியை லிடியா திறந்து பார்த்தால், அதில், அவரது குழந்தை இருந்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை.. அதாவது உடல்உறுப்புகள் ஒன்றுகூட அந்த பெட்டிக்குள் இல்லை.. அப்போதுதான், அவரது மகன் உறுப்புகள் ஆராய்ச்சிக்காக எடின்பர்க் ராயல் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த உடல் உறுப்புகளை பெறுவதற்கு மறுபடியும் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார் லிடியா..

ஹேப்பி பூரிப்பு
அதில் இத்தனை வருடங்கள் கழித்து வெற்றியும் பெற்றுள்ளார்.. குழந்தையின் உறுப்புகளை, தாயிடம் ஒப்படைக்க கோர்ட் தற்போது உத்தரவிட்டுள்ளது.. இந்த உத்தரவினால் லிடியா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.. ஆராய்ச்சிக்காக எடுத்து சென்ற உடல் உறுப்புகள் தான் ஒப்படைக்கப்படுகிறதே தவிர, மற்ற உடல் உறுப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.. எனினும், இந்த உத்தரவு குறித்து லிடியா சொல்லும்போது "என் மகனை திரும்ப பெற நான் ஆசைப்பட்டேன். அது இப்போது நடந்துள்ளது.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. இப்போது நான் இறப்பதற்கு முன்னாலேயே, அவனை என்னால் அடக்கம் செய்ய முடியும்.. இது எனக்கு நிம்மதியை தருவதாக உணர்கிறேன்" என்று கண்கலங்கி நெகிழ்ந்து சொல்கிறார்...

தாய்ப்பாசம்
இன்றுதான் தன் குழந்தையை அடக்கமும் செய்ய போகிறார் லிடியா.. ஆனால், லிடியாவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை.. லிடியாவுக்கு குடல் புற்றுநோய் தாக்கப்பட்டுள்ளது.. அதனால், எடின்பரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..எனினும், மகனின் உடல் பாகங்களை போராடி பெற்றுள்ள நிலையில், 48 வருடங்கள் கழித்து இந்த கேஸ் முடிவுக்கு வந்துள்ளது.. அத்துடன், ஒரு தாயின் பாசமும், அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications