1 மாத குழந்தையை அடித்து போட்டோ எடுத்து 'ஜாலி'க்காக ஃபேஸ்புக்கில் போட்ட கொடூர தந்தை

பிரான்ஸைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1 மாத குழந்தை உள்ளது. அந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அதன் தந்தை கோபம் அடைந்தார். கோபப்பட்டவர் பச்சிளம் குழந்தையை கண்டபடி அடித்து அதை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதுவும் ஜாலிக்காக ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளாராம்.
இந்த போட்டோவை பார்த்த அந்த தம்பதியின் நண்பர் ஒருவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி குழந்தையின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடிவாங்கிய குழந்தையின் நிலைமை தான் மோசமாக உள்ளது. குழந்தை அடிவாங்கியதை பார்த்த தாய் அது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. எங்கே போலீசில் தெரிவித்தால் தனது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் அவர் அமைதியாக இருந்துவிட்டார்.
பால் மணம் மாறாத குழந்தையை கண்மூடித்தனமாக ஒரு தந்தை அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications