எலும்பு முறிந்து.. பிச்சையெடுத்து.. 24 வருடம்.. 5 லட்சம் கிமீ.. 20 மாகாணம்.. உலுக்கி போட்ட சம்பவம்
காணாமல் போன மகனை 24 வருடம் கழித்து தேடி கண்டுபிடித்துள்ளார் தந்தை
பீஜிங்: சினிமாவில் வரும் சம்பவம் போலவே அப்படியே சீனாவில் நடந்துள்ளது.. இதனால் மக்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் உறைந்து போயுள்ளனர்.
நீண்ட காலமாகவே சீனாவில் குழந்தை கடத்தல் விவகாரம் உள்ளது.. இது அந்த நாட்டில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.. எந்த ஆட்சி வந்தாலும் இந்த குழந்தை கடத்தலை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை..
ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்... இப்படிப்பட்ட சூழலில் 1997-ம் ஆண்டு ஒரு குழந்தை கடத்தப்பட்டுவிட்டது.

குழந்தை
அந்த சீனர் பெயர் குவே கேங்டாங்.. ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்தவர்.. இவரது 2 வயது குழந்தையை யாரோ கடத்தி விட்டனர்.. சம்பவத்தன்று அந்த குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்திருக்கிறது.. அப்போதுதான், 2 பேர் வந்து அதை தூக்கி சென்றுவிட்டனர். இதனால் பதறி போன குவே, போலீசுக்கு ஓடினார்.. புகார் தந்தார்..

கடத்தல்
போலீசாரும் மிக தீவிரமான முயற்சிக்கு பிறகு, அந்த கடத்தல்காரர்களை கைது செய்துவிட்டனர்.. ஆனால் அந்த குழந்தையை காணோம்.. எவ்வளவோ தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை... இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த குவே, போலீஸெல்லாம் வேலைக்காகாது என்று முடிவு செய்து செய்து, தானே களத்தில் குதித்தார்..

பைக்
தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு பைக் வாங்கி கொண்டு, மகனை தேடி ஆரம்பித்தார்.. ஒவ்வொரு மாகாணமாக பைக்கிலேயே சுற்றி சுற்றி தேடினர்.. ஒருகட்டத்தில் கையில் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது.. பெட்ரோல் போடவும் காசு இல்லை.. அதனால், எந்த ஊரில் இருக்கிறாரோ, அங்கேயே பிச்சை எடுப்பார்.. அந்த பிச்சை காசில் பெட்ரோல் போட்டுக் கொண்டு, மறுபடியும் மகனை தேடி இன்னொரு ஊருக்கு போவார்..

எலும்புகள்
இதில் பலமுறை விபத்தில் சிக்கி உள்ளார் குவே.. உடம்பில் எத்தனையோ எலும்புகள் முறிந்துள்ளன.. எத்தனையோ காயங்கள் ஆறாமல் உள்ளன.. எத்தனையோ முறை, பிச்சை எடுத்த பணத்தை கொள்ளையர்களிடம் இழந்துள்ளார்.. ஒருகட்டத்தில் வெறுத்து போய் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.. ஆனால் அப்போது மகனின் போட்டோவை எடுத்து பார்த்ததும், மனம் மாறிவிடுமாம்.. மறுபடியும் மகனை தேட ஆரம்பித்துவிடுவார்..

கண்ணீர்
இப்படியே 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கிமீ பயணம் செய்தார்... அதற்குள் 24 வருடம் ஆகிவிட்டது.. இப்போது ஒருவழியாக மகனை கண்டுபிடித்துவிட்டார்.. ஒருநாள் போலீசார், மகன் கிடைத்துவிட்டதாக இவருக்கு தகவல் தந்துள்ளனர்.. இதையடுத்து, உடனடியாக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டு, அந்த மகன்தான் தன்னுடைய சொந்த மகன் என்பது உறுதியாகி உள்ளது.. இப்போது அந்த மகனுக்கு 26 வயதாகிறது.. ஒரு டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.. கல்யாணமாகி விட்டது.

நெகிழ்ச்சி
அப்பாவும் - மகனும் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீரை வடித்தனர்.. இந்த சம்பவத்தில் மேலும் 2 ட்விஸ்ட் நடந்துள்ளது.. இந்த குழந்தையை அப்போது கடத்தியது ஒரு பெண்ணாம்.. குழந்தையை ஒரு கும்பலிடம் பணத்துக்காக விற்றுள்ளார்.. அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.. இன்னொரு ட்விஸ்ட், தன் மகனை தேடி குவே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, காணாமல் போன 7 குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளாராம். அப்பாவும் - மகனும் நெகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்..!












Click it and Unblock the Notifications