For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுதான் அந்த 'சீக்ரெட் டாக்குமென்ட்ஸ்'! அமெரிக்காவையே அலறவிட்ட ட்ரம்ப்.. விசாரணையில் ஷாக் தகவல்கள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியை இழந்த பின்னர் சில முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களை அதிபர் மாளிகையிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான் டொனால்ட் ட்ரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2021ம் ஆண்டு நடைபெற்ற அதிபருக்கான தேர்தலில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து புதிய அதிபராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டார். ஆனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அதனை ஏற்கவில்லை. எனவே வெள்ளை மாளிகையை கபளீகரம் செய்தனர். அப்போதுதிருந்து தற்போது வரை ட்ரம் ஆதரவாளர்களுக்கும், பைடன் ஆதரவாளர்களுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

FBI accuses Trump of parting with Trumps home as a threat to national security

இந்நிலையில், எதிர்வரும் 2024ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். இதற்காக தீவிர பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில்தான், பல சிக்கல்களில் ட்ரம்ப் பெயர் அடிப்பட தொடங்கியது. ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு கட்சியின் நிதியிலிருந்து பணம் கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

தற்போது மற்றொரு சீரியஸான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இவர் அதிபர் பதவியை இழந்த பின்னர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறும் போது தன்னுடன் சில முக்கியமான ஆவணங்களை வீட்டிற்கு எடுத்து வந்தார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. அவர் எந்த மாதிரியான டாக்குமென்டுகளை கொண்டு வந்தார் என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றிய இரகசிய ஆவணங்களை ட்ரம்ப் தன்னுடன் கொண்டு வந்திருக்கிறார். மேலும், இத்துடன் அவர் அணுசக்தி தொடர்பான ஆவணங்களையும் கொண்டு வந்திருக்கிறார் என்று எஃப்பிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த ஆவணங்கள் வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் இருந்ததாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் எஃப்பிஐ கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் வரை ட்ரம்ப் சிறை தண்டனையை அனுபவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

English summary
US President Donald Trump is said to have taken home some important national security documents from the presidential palace after losing his presidency. A lot of shocking information has been revealed in the case investigation related to this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X