பேரழிவு ஏற்பட போகுதா? புதிய பாபா வங்கா கணிப்பால் அச்சத்தில் உறைந்த மக்கள்.. கொரோனாவை சரியாக கணித்தவர்
டோக்கியோ: ஜூலை 5 ஆம் தேதி பேரழிவு ஏற்படும் என புதிய பாபா வங்காவின் கணிப்புகள் கடந்த சில நாட்களாவே ஜப்பான் மக்களை கலங்கடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், அந்நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கங்களும் ஏற்பட்டு வருவது ஜப்பான் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
ஜப்பானில் ஷின்மோடகே எரிமலை வெடித்து சிதறியுள்ளது. மிகப்பெரிய அளவில் லாவா குழம்புகளை வெளியே கக்கி வருகிறது இந்த எரிமலை. இதனால் காற்றில் பல மீட்டர் உயரத்திற்கு கரும்புகை கலந்து வருகிறது. உள்ளூர் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் எரிமலை பக்கம் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய பாபா வங்காவின் கணிப்பு
எரிமலை வெடித்து சிதறியதுமே ஜப்பானில் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் ஒட்டுமொத்த மக்களும் பீதியில் உறைந்து இருக்கிறார்கள். அதாவது, புதிய பாபா வங்கா என சொல்லப்படும் ஜப்பானின் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி வெளியிட்ட ஒரு கணிப்பே இந்த தகவல் ஆகும்.
2025 ஆம் ஆண்டு பெரிய அளவிலான பேரழிவுகள் ஏற்படும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டு இருந்தார். எனவே தற்போது திடீரென எரிமலை வெடித்து சிதறியதும், அவரது கணிப்புடன் ஒப்பிட்டு ஜப்பானியர்கள் பலரும் பகிர்ந்து வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா கடுமையாக பாதிப்பு
ஜப்பான் வானிலை மையமும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 3 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மூட்டம் இருக்கும் என தெரிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 க்கு பிறகு இவ்வளவு பெரிய எரிமலை சீற்றம் ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும். இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் எற்பட்டன.
ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷு நகரில் ரிக்டர் அளவில் 5.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள தீவுகளில் இருந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் அதிகாரிகள் தங்க வைத்தனர். நிலநடுக்கம் மேலும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசு எச்சரித்துள்ளது.
அதேவளையில் அடிப்படையற்ற வதந்திகளை மக்கள் நம்ப கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புதிய பாபா வங்காவின் கணிப்பு மற்றும் சமீபத்திய நிகழ்வுகளால் ஜப்பானில் சுற்றுலாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத அளவாக 3.9 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்து இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது.
மிகுந்த தயக்கமாக உள்ளது
ஜப்பானில் ஜூலை மாதம் மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று வங்காவின் கணிப்புகளை தொடர்பு படுத்தி சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்படுவதால், சுற்றுலா கடுமையாக பாதித்து இருப்பதாதக பயண ஏற்பட்டாளர் நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஜப்பானுக்கு அடிக்கடி சுற்றுலா மேற்கொள்ளும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த பிரெண்டன் சாய் கூறுகையில், "ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பான் செல்வதற்கு எனக்கு மிகுந்த தயக்கமாக உள்ளது. ஏனெனில் இந்த மாதத்தில் நடைபெற போவதாக வெளியிடப்பட்ட சில கணிப்புகள்தான். முடிந்தால் எனது பயணத்தை ஒத்திவைத்து செப்டம்பரில் செல்வேன்" என்றார்.
யார் இந்த புதிய பாபா வங்கா?
ரியோ டாட்சுகி என்பவர் புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். தனது கனவுகளில் வரும் நிகழ்வுகளை வரைந்து அதில் தெரிய வரும் தகவல்களை பகிர்ந்து வருகிறார். 2011ல் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியை முன்கூட்டியே கணித்திருந்தார்.
மேலும், கொரோனா பேரழிவையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். இவரை ஜப்பானின் பாபா வாங்கா என்று கூட சிலர் அழைக்கிறார்கள். இதனால் ஜப்பான் மக்களுக்கு இதன் மேல் ஆர்வம் அதிகரித்தது. எனவே இவரது கணிப்புகள் ஜப்பான் மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications