கட்டியணைத்த அதிபர்.. கூடவே ராணுவ மரியாதை! அபுதாபி வரவேற்பால் ஆனந்தமான பிரதமர் மோடி! ஹைலைட் வார்த்தை
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று சென்றார். அவரை அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத்தழுவி, ராணுவ மரியாதையுடன் வரவேற்றார். இதையடுத்து அபுதாபி பற்றி பிரதமர் மோடி கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் பிரதமர் மோடி ஆனந்தமாய் கூறிய வார்த்தைகள் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளின் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் அவரது பயணம் அமைகிறது.

அதோடு வெளிநாடுகளில் நடக்கும் முக்கிய கூட்டமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் கத்தாரில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
இந்த கோவில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன்பு அடிக்கல் நாட்டினார். இக்கோயில் இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் இருக்கின்றன. நிலநடுக்கம், மற்றும் அதீத வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க 100 சென்சார்கள் கோயிலுக்கு அடியில் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த கோவில் என்பது 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை தான் பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று புறப்பட்டு 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு சென்றார்.
இன்று அபுதாபி சென்று இறங்கிய பிரதமர் மோடியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆரத் தழுவி வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அங்கு தனக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பை பார்த்து பிரதமர் மோடி பூரித்துப் போனார்.
இதுதொடர்பாக அவர், ‛‛ஐக்கிய அரபு எமிரேட்சியில் இருப்பதை நான் எனது சொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறேன் (Feels like home when in UAE')'' என உணர்ச்சிவசப்பட்டு கூறினார். எனது அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி. உங்களை சந்திக்க ஒவ்வொரு முறை வரும்போதும் எனது குடும்பத்தினரை சந்திப்பதை போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நாம் சந்தித்துள்ளோம். நமது இருதரப்பு உறவில் இத்தகைய சந்திப்பில் அரிதானவை '' என பெருமைப்பட கூறினார்.
பிரதமர் மோடி பிரதமரான பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றிருப்பது இது 7 வது முறையாகும். இதையடுத்து நாளை பிரதமர் மோடி கத்தார் செல்ல உள்ளார். பிரதமரான பிறகு கத்தாருக்கு அவர் மேற்கொள்ளும் 2வது பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications